எல்லாரும் அசத்துனாங்க.. ஆனா அவர் மட்டும் இல்லனா மேட்ச் கைவிட்டு போயிருக்கும்.. சச்சின் பாராட்டு

Sachin Tendulkar 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் 3 போட்டிகளில் ஏற்கனவே 2 வெற்றிகளை பெற்றிருந்த இந்தியா இதையும் சேர்த்து 3 – 1* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதனால் சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தையும் இந்தியா தக்க வைத்துள்ளது.

ராஞ்சியில் பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜோ ரூட் 122* ரன்கள் எடுத்த உதவியுடன் 353 ரன்கள் குவித்தது. ஆனால் அதன் பின் களமிறங்கிய இந்தியா கடுமையாக போராடியும் 307 ரன்கள் மட்டுமே எடுத்தது. சொல்லப்போனால் ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்தும் கேப்டன் ரோகித் சர்மா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 177/7 என திண்டாடிய இந்தியா 300 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

பாராட்டிய சச்சின்:
ஆனால் அப்போது துருவ் ஜுரேல் முக்கியமான 90 ரன்களும் குல்தீப் யாதவ் 28 ரன்களும் எடுத்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினர். அந்த உத்வேகத்துடன் இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்தை மடக்கிப் பிடித்த இந்தியா 145 ரன்களுக்கு சுருட்டியது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 60 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 5, குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இறுதியில் 192 ரன்களை துரத்திய இந்திய அணியை கேப்டன் ரோஹித் சர்மா 55, ஜெய்ஸ்வால் 37, கில் 52*, துருவ் ஜுரேல் 39* ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தனர். இந்நிலையில் 2 இன்னிங்சிலும் துருவ் ஜுரேல் சிறப்பாக பேட்டிங் செய்யாமல் போயிருந்தால் இப்போட்டி இந்தியாவின் கையை விட்டுப் போயிருக்கலாம் என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் பாராட்டியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“ஸ்கோர் 3 – 1. மீண்டும் ஒருமுறை அழுத்தமான சூழ்நிலையிலிருந்து போராடி இந்தியா இப்போட்டியை வென்றுள்ளது. இது நம்முடைய வீரர்களின் வலுவான மனநிலை மற்றும் குணத்தை காட்டுகிறது. ஆகாஷ் தீப் தன்னுடைய முதல் டெஸ்டில் மகத்தான ஸ்பெல்லை வீசினார். 2 இன்னிங்சிலும் துருவ் ஜுரேல் லென்த்தை சிறப்பாக படித்தார். அவருடைய ஃபுட் ஃவொர்க் அற்புதமாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் குல்தீப்புடன் சேர்ந்து அவர் அமைத்த பார்ட்னர்ஷிப் தான் நம்மை போட்டியிலேயே வைத்திருந்தது”

இதையும் படிங்க: அவங்க 3 பேருக்கு எதிரா பேட்டிங் செய்வது ரொம்ப கஷ்டமா இருக்கு.. தோல்விக்கு பின்னர் – பென் ஸ்டோக்ஸ் பேட்டி

“2வது இன்னிங்ஸில் மீண்டும் அவருடைய பேட்டிங் நம்மை வெற்றி பெற வைத்தது. 2வது இன்னிங்ஸில் குல்தீப் பவுலிங் முக்கியமானதாக இருந்தது. அஸ்வின், ஜடேஜா, ரோகித் போன்ற சீனியர்கள் தங்களுடைய வேலையை செய்தனர். சேசிங்கில் சுப்மன் கில் பொறுமையுடன் தன்னுடைய திறமையை காட்டி முக்கியமான 50 ரன்கள் அடித்தார். அவர்களால் இந்த போட்டியும் தொடரும் நம்முடையதானது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.

Advertisement