அவங்க 3 பேருக்கு எதிரா பேட்டிங் செய்வது ரொம்ப கஷ்டமா இருக்கு.. தோல்விக்கு பின்னர் – பென் ஸ்டோக்ஸ் பேட்டி

Stokes
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரண்டு தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து அணியானது இந்திய அணிக்கு எதிரான நான்காவது போட்டியிலும் தோல்வியை சந்தித்து இந்திய அணியிடம் இந்த தொடரை இழந்துள்ளது.

குறிப்பாக ராஞ்சி நகரில் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி துவங்கிய இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 145 ரன்கள் மட்டுமே எடுத்து. இதன் காரணமாக இந்திய அணி 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டி மிகச் சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் ஸ்கோர் போர்டு சொல்வதற்கு மதிப்பு கிடையாது. ஏனெனில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றிக்காக கடுமையாக போராடினோம். எங்களுடைய அணியை நினைத்தால் உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.

ஏனெனில் நாங்கள் அனுபவமற்ற சுழற்பந்து வீச்சாளர்களை வைத்திருந்தாலும் அவர்கள் செயல்பட்ட விதம் உண்மையிலேயே பெருமை அளிக்கிறது. இந்த தொடர் முழுவதுமே எங்களது அணியின் இளம் சுழற்ப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றனர். இதை தவிர்த்து அவர்களிடம் என்னால் அதிகமாக எதையும் எதிர்பார்க்க முடியாது. என்னுடைய கேப்டன்சியில் இளம் வீரர்களுக்கு நல்ல சுதந்திரம் அளித்து சவாலான சூழல்களில் விளையாட வைக்க வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய எண்ணம்.

- Advertisement -

நான் டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகப்பெரிய ரசிகன். எனவே எங்களது அணியில் இளம் வீரர்கள் வந்து விளையாடுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோன்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர்களுக்கு எதிராக பேட்டிங் செய்வது உண்மையிலேயே கடினம், அவர்களுக்கு எதிராக ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து விளையாடுவது சவாலான ஒன்று.

இதையும் படிங்க : 2013 – 2024 வரை.. தொடர்ந்து 17வது வெற்றி.. சொந்த மண்ணில் கில்லியாக திகழும் இந்தியா.. யாராலும் தொட முடியாத உலக சாதனை

அதேபோன்று ஜோ ரூட் மீது வைக்கப்படும் விமர்சனங்களை நியாயமற்றவை. ஏனெனில் அவர் இங்கிலாந்து அணிக்காக 12000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். எனவே அதைப் பற்றி எல்லாம் நாங்கள் பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டியது கிடையாது. நான் எப்பொழுதுமே சொல்லும் விடயம் ஒன்றுதான் நாங்கள் எந்த இடத்திலும் போட்டியை விட்டுக் கொடுக்கவில்லை. வெற்றிக்காக மிகக் கடுமையாக போராடினோம். அதற்காக அந்த செயல்பாட்டை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement