2013 – 2024 வரை.. தொடர்ந்து 17வது வெற்றி.. சொந்த மண்ணில் கில்லியாக திகழும் இந்தியா.. யாராலும் தொட முடியாத உலக சாதனை

IND vs ENG 4th Test
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் ஹைதராபாத் நகரில் நடந்த முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. அதனால் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற அந்த அணி 12 வருடங்கள் கழித்து இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று சொன்னதை செய்து காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கம்பேக் கொடுத்த இந்தியா தொடரை சமன் செய்தது. அதை விட மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த சாதனை படைத்த இந்திய அணி இங்கிலாந்தை தெறிக்க விட்டு முன்னிலை பெற்றது.

- Advertisement -

தொடர்ந்து 17வது வெற்றி:
அந்த நிலையில் ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுத்த இங்கிலாந்தை விட 307 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா முதல் 2 நாட்கள் தடுமாறியது. ஆனால் மூன்றாவது நாளில் இங்கிலாந்தை 145 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா பின்னர் 192 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து 5 விக்கெட் வித்யாசத்தில் வென்றது.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் 200க்கும் குறைவான இலக்கை சேசிங் செய்த போட்டிகளில் 30வது முறையாக இந்தியா வென்றுள்ளது. வரலாற்றில் சொந்த மண்ணில் இது வரை 200க்கும் குறைவான இலக்கை சேசிங் செய்த 33 டெஸ்ட் போட்டிகளில் 30* வெற்றிகளை பெற்ற இந்தியா 3 டிராவை பதிவு செய்தது. ஒரு முறை கூட தோல்வியை சந்தித்ததில்லை.

- Advertisement -

அதை விட இதையும் சேர்த்து தங்களுடைய சொந்த மண்ணில் தொடர்ந்து 17வது முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் தோனி தலைமையிலான இந்தியா தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: 4 ஆவது டெஸ்ட் போட்டியில் நாங்க ஜெயிச்சதுக்கு காரணமே இவர்தான்.. இளம்வீரரை பாராட்டி – ரோஹித் சர்மா பேட்டி

ஆனால் அதன் பின் கடந்த 12 வருடங்களாக இந்த தொடரையும் சேர்த்து 17 டெஸ்ட் தொடர்களில் தொடர்ச்சியாக வெற்றி கண்டுள்ளது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக தொடர்களில் வென்ற அணி என்ற யாராலும் தொட முடியாத உலக சாதனையையும் இந்தியா படைத்து வருகிறது. அந்த பட்டியல்:
1. இந்தியா : 17* தொடர்கள் (22/02/2013 – 26/02/2024)*
2. ஆஸ்திரேலியா : 10 தொடர்கள், (1/7/2004 – 28/11/2008)
3. வெஸ்ட் இண்டீஸ் : 8 தொடர்கள் (10/03/1976 – 11/04/19860
4. நியூஸிலாந்து : 8 தொடர்கள் (1/12/2017 – 3/1, 2021)

Advertisement