2 பக்கமும் தொல்லை.. போட்டியை லைவா பாக்காம போய்ட்டேன்.. ராஜ்கோட் வெற்றி பற்றி சச்சின் கருத்து

Sachin tendulkar
- Advertisement -

ராஜ்கோட் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுத்த உதவியுடன் 445 ரன்கள் எடுத்தது. அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாட முயற்சித்து 319 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக பென் டக்கெட் சதமடித்து 153 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா 430/4 ரன்கள் குவித்து தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 214*, கில் 91, சர்பராஸ் கான் 68* ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

சச்சின் பாராட்டு:
இறுதியில் 557 என்ற மெகா இலக்கை துரத்திய இங்கிலாந்து மும்பை விட மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 122 ரன்களுக்கு சுருண்டு 21ஆம் நூற்றாண்டில் தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்க் வுட் 33 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மறுபுறம் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்தது. அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா சொந்த மண்ணில் எங்களை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது என்பதை இங்கிலாந்துக்கு காண்பித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்தும் சர்பராஸ் கான் இரட்டை அரை சதமடித்தும் இங்கிலாந்துக்கு இரு பக்கமும் தொல்லையை கொடுத்ததாக சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ஆனால் அதை தம்மால் நேரலையில் பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் இந்திய அணியை ட்விட்டரில் பாராட்டியுள்ளது பின்வருமாறு. “இரட்டை சதம். இரட்டை அரை சதம். ஜெயஸ்வால் மற்றும் சர்பராஸ் ஆகியோரை கொண்ட இந்த ஜோடி இங்கிலாந்துக்கு இரட்டை தொல்லையாக இருந்தது. அவர்கள் விளையாடியதை நான் நேரடியாக பார்க்கவில்லை”

இதையும் படிங்க: 435 ரன்ஸ்.. சேலத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்த தமிழ்நாடு.. 7 வருடத்துக்கு பின் சாதித்தது எப்படி?

“ஆனால் அவர்களுடைய ஆட்டத்தின் தாக்கத்தை கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். தொடர்ந்து இப்படியே விளையாடுங்கள். இந்திய அணியிடமிருந்து பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் களத்தில் ஒரு அழுத்தமான ஆல் ரவுண்ட் செயல்திறன் வெளிப்பட்டது. இப்படி ஒரு ஆதிக்கமான செயல்பாட்டை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. வெல்டன் இந்தியா” என்று கூறியுள்ளார்.

Advertisement