435 ரன்ஸ்.. சேலத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்த தமிழ்நாடு.. 7 வருடத்துக்கு பின் சாதித்தது எப்படி?

Ranji Trohy
- Advertisement -

இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை 2024 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் பிப்ரவரி 16ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற 123வது லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தமிழக அணிக்கு சுரேஷ் லோகேஷ்வர் 10, நாராயணன் ஜெகதீசன் 22, பிரதோஷ்பால் 20 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 64/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய தமிழ்நாடு அணிக்கு நட்சத்திர வீரர் பாபா இந்திரஜித் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இருப்பினும் அவருக்கு கை கொடுக்க முயற்சித்த முகமது அலி 27 ரன்களில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து வந்த மற்றொரு அனுபவ வீரர் விஜய் சங்கர் தன்னுடைய பங்கிற்கு நிதானமாக விளையாடினார்.

- Advertisement -

7 வருடம் கழித்து:
அந்த வகையில் 5வது விக்கெட்டுக்கு பஞ்சாப் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட விஜய் சங்கர் – பாபா இந்திரஜித் ஜோடி 281 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் நேத்து தமிழகத்தை வலுப்படுத்தி பிரிந்தது. அதில் விஜய் சங்கர் சதமடித்து 130 ரன்களில் அவுட்டாக மறுபுறம் தொடர்ந்து பஞ்சாப் பவுலர்களை பந்தாடிய பாபா இந்திரஜித் சதமடித்து 187 ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக அவுட்டானார்.

அவர்களுடைய சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு 435 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வலுவான நிலையை எட்டியது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக சுக்விந்தர் சிங் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி தமிழ்நாடு பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் பெற்றது.

- Advertisement -

அதிகபட்சமாக அன்மோல் மல்கோத்ரா 64*, அன்மோல்ப்ரீத் சிங் 41, நேஹால் வதேரா 43 ரன்கள் எடுக்க பந்து வீச்சில் அசத்திய தமிழ்நாடு சார்பில் அதிகபட்சமாக அஜித் ராம் 6, கேப்டன் சாய் கிசோர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பின் தமிழ்நாடு ஃபாலோ ஆன் கொடுத்ததை தொடர்ந்து 161 ரன்கள் பின்தங்கிய நிலையில் பேட்டிங் செய்த பஞ்சாப் சுமாராக விளையாடி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக நேஹல் வதேரா சதமடித்து 109 ரன்கள் எடுத்த போதிலும் மற்ற வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். தமிழ்நாடு சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சாய் கிசோர் 4, அஜித் ராம் 3, பிரதோஷ்பால் 3 விக்கெட்களை எடுத்தனர். இறுதியில் 71 சுலபமான இலக்கை துரத்திய தமிழகத்திற்கு லோகேஷ்வர் 19, ஜெகதீசன் 26*, பிரதோஷ்பால் 22* ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

இதையும் படிங்க:4 ஆவது டெஸ்ட் போட்டியில் பும்ராவிற்கு ஓய்வளிக்க திட்டம். அவருக்கு பதிலா விளையாடப்போவது – யார் தெரியுமா?

இந்த வெற்றியால் எலைட் குரூப் சி பிரிவில் விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றி 2 ட்ராவை பதிவு செய்த தமிழ்நாடு மொத்தம் 28 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு நாட் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த தமிழ்நாடு 6 வருடங்கள் கழித்து முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையின் காலிறுதிக்கு பெற்றுள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement