4 ஆவது டெஸ்ட் போட்டியில் பும்ராவிற்கு ஓய்வளிக்க திட்டம். அவருக்கு பதிலா விளையாடப்போவது – யார் தெரியுமா?

Bumrah
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளானது நடைபெற்று முடிந்துள்ள வேளையில் இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 23-ஆம் தேதி ராஞ்சி நகரில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இந்த நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் தொடர்ச்சியாக ஓய்வின்றி போட்டிகளில் விளையாடி வரும் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு பதிலாக யார் மாற்று வீரராக நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த கேள்விக்கும் தற்போது பதில் கிடைத்துள்ளது.

அந்த வகையில் இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் சிராஜ் ஓய்வு எடுத்துக்கொண்ட போது அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்து விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் மூன்றாவது போட்டி ஆரம்பித்த போது பெங்கால் அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாட சென்று விட்டார்.

- Advertisement -

இவ்வேளையில் மீண்டும் தற்போது அவர் இந்திய அணியுடன் இணைந்து நான்காவது போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு நான்காவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஐந்தாவது போட்டியில் தொடர்ந்து பும்ராவிற்கு ஒய்வளிக்கப்பட்டு முகேஷ் குமாரே விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 4 ஆவது டெஸ்ட் போட்டியில் முக்கிய இந்திய வீரருக்கு ஓய்வளிக்க திட்டம் – அணி நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு

இதன் காரணமாக தற்போது ரஞ்சி கிரிக்கெட்டிற்கு சென்றுள்ள முகேஷ் குமார் மீண்டும் இந்திய அணியில் இணைய உள்ளார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாகவே இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வரும் அவருக்கே நிச்சயம் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.

Advertisement