4 ஆவது டெஸ்ட் போட்டியில் முக்கிய இந்திய வீரருக்கு ஓய்வளிக்க திட்டம் – அணி நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதோடு கடைசியாக நடைபெற்று முடிந்த மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் இந்திய அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது வரும் பிப்ரவரி 23-ம் தேதி ராஞ்சி நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்த அணியில் முக்கிய வீரர் ஒருவருக்கு ஓய்வளிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு நான்காவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடரில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ள அவர் 17 விக்கெடுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அதோடு பும்ரா தான் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராகவும் இருக்கிறார். இருப்பினும் தொடர்ச்சியாக ஓய்வின்றி போட்டிகளில் பங்கேற்று வரும் அவருக்கு பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த நான்காவது போட்டியில் ஓய்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் நான்காவது போட்டியின் முடிவில் இந்திய அணியின் வெற்றி தோல்வியின் அடிப்படையில் தான் அவர் ஐந்தாவது போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி நான்காவது போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் ஐந்தாவது போட்டியிலும் அவருக்கு தொடர்ச்சியாக ஓய்வு வழங்கப்படும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : 16 ஆண்டுகால ஐ.பி.எல் தொடரின் சிறந்த 15 பேர் கொண்ட அணி இதுதான். அந்த அணியில் தோனிக்கு கொடுக்கப்பட்ட கவுரவம்

ஏற்கனவே இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜிற்கு பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஓய்வு வழங்கப்பட்டு மீண்டும் மூன்றாவது போட்டியின்போது விளையாடியிருந்தார். அதேபோன்று தற்போது நான்காவது போட்டியில் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட்டு ஐந்தாவது போட்டியில் விளையாட வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement