இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக 17-வது சீசனானது அடுத்த மாதம் துவங்க உள்ளது. இந்நிலையில் இத்தனை ஆண்டு கால ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சிறந்த அணி தற்போது தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான சுவாரசிய தகவல்களும் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பினை பெற்ற இந்த ஐபிஎல் தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சிறந்த 15 பேர் கொண்ட வீரர்களை கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த அணியை தேர்வு செய்யும் குழுவில் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், மேத்யூ ஹைடன், டாம் மூடி, டேல் ஸ்டெயின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதுதவிர்த்து இந்தியா முழுவதும் உள்ள 70 பத்திரிகையாளர்களும் இந்த அணியை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்படி பல்வேறு தரப்பட்ட பிரபலங்களும் சேர்ந்து தேர்வு செய்துள்ள இந்த பதினைந்து பேர் கொண்ட ஐபிஎல் அணியில் மகேந்திர சிங் தோனிக்கு சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இத்தனை ஆண்டுகால ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டனாக தோனியை தேர்வு செய்துள்ள அவர்கள் இந்த 15 பேர் கொண்ட அணிக்கான கேப்டனாகவும் அவரையே நியமித்துள்ளனர்.
மேலும் இந்த அணியில் இதுவரை தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஐ.பி.எல் தொடரின் 15 பேர் கொண்ட கனவு அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் இதோ :
இதையும் படிங்க : என்னோட மொத்த கேரியரில் செஞ்சதை.. ஜெய்ஸ்வால் ஒரே மேட்ச்ல முடிச்சுட்டாரு.. அலெஸ்டர் குக் பாராட்டு
1) மஹேந்திர சிங் தோனி (கேப்டன்), 2) விராட் கோலி, 3) கிரிஸ் கெயில், 4) டேவிட் வார்னர், 5) சுரேஷ் ரெய்னா, 6) டிவில்லியர்ஸ், 7) சூரியகுமார் யாதவ், 8) ஹார்டிக் பாண்டியா, 9) ரவீந்திர ஜடேஜா, 10) கைரன் பொல்லார்டு, 11) ரஷீத் கான், 12) சுனில் நரைன், 13) யுஸ்வேந்திர சாஹல், 14) லாசித் மலிங்கா, 15) ஜஸ்ப்ரீத் பும்ரா.