தெ.ஆ அணியின் சந்தோசத்தை உடைச்சு.. இம்ப்ரெஸ் பண்ணிட்டீங்க.. கேஎல் ராகுல் பற்றி சச்சின் வியப்பு

Sachin Tendulkar
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சென்சூரியன் நகரில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 245 ரன்கள் எடுத்தது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா 17, ஜெய்ஸ்வால் 17, சுப்மன் கில் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அப்போது மிடில் ஆர்டரரில் நிதானமாக விளையாட முயற்சித்த விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களில் போராடி அவுட்டானார்கள். அதனால் 107/5 என தடுமாறிய இந்தியா 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட போது மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் தென்னாபிரிக்க பவுலர்களுக்கு சவாலாக மாறி 14 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 101 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

சச்சின் பாராட்டு:
அந்த வகையில் பேட்டிங்க்கு சவாலான மைதானத்தில் மற்ற வீரர்கள் 50 ரன்கள் கூட தாண்டாத நிலையில் தனி ஒருவனாக சதமடித்த ஓரளவு தன்னுடைய அணியை காப்பாற்றிய அவர் தென்னாப்பிரிக்க மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் படைத்தார். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிசோ ரபாடா 5 விக்கெட்கள் எடுத்து அசத்தினார்.

இந்நிலையில் இப்போட்டியில் பந்து வீச்சில் அபாரமான துவக்கத்தை பெற்ற தென்னாபிரிக்காவை கடைசியில் மகிழ்ச்சியுடன் ஃபினிஷிங் செய்ய முடியாத அளவுக்கு ராகுல் அசத்தலாக பேட்டிங் செய்ததாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். மேலும் இந்த போட்டியில் ராகுல் ஃபுட் வொர்க் தம்மை மிகவும் கவர்ந்ததாக தெரிவிக்கும் அவர் ஜெரால்ட் கோட்சி, நன்ரே பர்கர் தென்னாப்பிரிக்காவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுவார்கள் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ட்விட்டரில் (எக்ஸ்) சச்சின் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சிறப்பாக விளையாடினீர்கள் கேஎல் ராகுல். அவருடைய தெளிவான சிந்தனை என்னை மிகவும் கவர்ந்தது. அவரின் ஃபுட் வொர்க் துல்லியமாகவும் உறுதியுடனும் இருந்தது. அது பேட்ஸ்மேன் சரியாக செயல்படும் போது நிகழக் கூடியதாகும். இந்த சதம் இப்போட்டியில் முக்கிய திருப்பு முனையாக இருக்கும். நேற்று ஒரு கட்டத்தில் இருந்ததை வைத்து இந்தியா தற்போது 245 ரன்களை எடுத்ததில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்”

இதையும் படிங்க: எல்லாம் சி.எஸ்.கே டீமுக்கு வந்த ராசி.. நியூசிலாந்துக்கு எதிராக டி20 போட்டியில் – அசத்திய முஸ்தபிசுர் ரஹ்மான்

“நன்ரே பர்கர் மற்றும் ஜெரால்ட் கோட்சி ஆகியோர் தென் ஆப்பிரிக்கா பவுலிங் துறையில் நல்ல சேர்வாக இருக்கிறார்கள். இருப்பினும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தென்னாப்பிரிக்கா தங்களுடைய பந்து வீச்சு செயல்பாடுகளால் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்” என கூறியுள்ளார்.

Advertisement