எல்லாம் சி.எஸ்.கே டீமுக்கு வந்த ராசி.. நியூசிலாந்துக்கு எதிராக டி20 போட்டியில் – அசத்திய முஸ்தபிசுர் ரஹ்மான்

Mustafizur-Rahman
- Advertisement -

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியானது ஏற்கனவே அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது ஆட்டமானது இன்றைய டிசம்பர் 27-ஆம் தேதி நேப்பியர் நகரில் நடைபெற்று முடிந்தது.

இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடி நியூசிலாந்து அணியானது பங்களாதேஷ் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளுக்கு 134 ரன்களை மட்டுமே குவித்தனர்.

பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணியானது 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 137 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது வங்கதேச அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய முஸ்தபிசுர் ரஹ்மான் 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான தொடர் மட்டுமல்ல ஐ.பி.எல் தொடரிலும் – இந்த இந்திய வீரர் விளையாடுவது சந்தேகம்

சமீப காலமாகவே சர்வதேச கிரிக்கெட்டில் சற்று சுமாரான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வந்த போட்டியில் முஸ்தபிசுர் ரஹ்மான் இப்படி அபாரமாக பந்து வீசியது சென்னை அணிக்கு வந்த ராசி தான் என்று ரசிகர்கள் அவரது இந்த சிறப்பான ஆட்டத்தை பகிர்ந்து அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு எதிர்வரும் ஐபிஎல் தொடரிலும் அவர் தோனியின் தலைமையின் கீழ் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement