ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான தொடர் மட்டுமல்ல ஐ.பி.எல் தொடரிலும் – இந்த இந்திய வீரர் விளையாடுவது சந்தேகம்

IND-vs-AFG
- Advertisement -

அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட இந்திய அணியானது அடுத்ததாக அடுத்த ஆண்டு 2024-ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலககோப்பையை குறி வைத்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் அனைத்து டி20 போட்டிகளும் இந்திய அணியின் வீரர்களுக்கு மிக முக்கியமான போட்டிகளாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய அணியின் வீரர்கள் ஐபிஎல் தொடரிலும் விளையாட உள்ளதால் ஐபிஎல் தொடரும் முக்கியமான ஒரு தொடராக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் இந்த டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணி தங்களது வீரர்களை தீவிரமாக தயார்படுத்தி வரும் வேளையில் அண்மையில் காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகிய ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் டி20 தொடரை தவறவிடுவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூடிய விரைவில் இது குறித்த செய்தி தெரியவரும் என்று கூறப்படுகிறது. அதோடு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடுவது கேள்விக்குறி என்றே கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபகாலமாகவே இந்திய அணியின் டி20 கேப்டனாக பாண்டியா, சூரியகுமார் யாதவ் என அடிக்கடி கேப்டன் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில் டி20 உலககோப்பைக்கு யார் தான் கேப்டனாக இருக்கப்போகிறார்கள் என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சென்சூரியன் மைதானத்தை கோட்டையாக்கிய ராகுல்.. வேறு எந்த வெளிநாட்டு வீரரும் செய்யாத தனித்துவ சாதனை

அதோடு இப்படி அடிக்கடி காயத்தில் சிக்கி அணியின் வெளியிலேயே இருந்து வரும் ஹார்டிக் பாண்டியாவை தவிர்த்து வேறு ஏதாவது நல்ல இளம் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை தேர்வு செய்து அவர்களுக்கு வாய்ப்பு அளித்து ஊக்கப்படுத்தலாம் என்றும் ரசிகர்கள் சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement