- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கேரம் பால் கில்லி.. எதையாச்சும் பண்ணி இதை செஞ்சுருவாரு.. மேட்ச் வின்னர் அஸ்வினுக்கு சச்சின் பாராட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த அவர் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் 2010, 2011 கோப்பைகளை சென்னை வெல்ல உதவினார். அதனால் அப்போதைய கேப்டனாக இருந்த தோனி அவருக்கு சர்வதேச அரங்கில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தார்.

அந்த வாய்ப்பில் அசத்தியதால் ஹர்பஜன் சிங்கை கழற்றி விட்ட தோனி அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினார். அந்த வாய்ப்பில் அபாரமாக செயல்பட்ட அஸ்வின் 2012 – 2024 வரை சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருக்க முக்கிய பங்காற்றினார். அத்துடன் அனில் கும்ப்ளேவுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராகவும் அஸ்வின் சாதனை படைத்தார்.

- Advertisement -

கேரம் கில்லி அஸ்வின்:

மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் அவருக்கு பின் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த சாதனை படைத்துள்ள அஸ்வின் 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளர் ஆவார். அவை அனைத்தையும் விட டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருது வென்ற வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் முரளிதரன் உலக சாதனையையும் (தலா 11) அஸ்வின் சமன் செய்துள்ளார்.

அப்படிப்பட்ட அவர் தற்போது 38 வயதை தாண்டி விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஓய்வு பெற்றுள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் கேரம் பந்துகளை துல்லியமாக வீசுவதில் அஸ்வின் கில்லி என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். மேலும் பவுலிங் இல்லையென்றால் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னராக செயல்பட்டதாகவும் சச்சின் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

சச்சின் பாராட்டு:

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “அஸ்வின், நீங்கள் எப்படி உங்கள் மனதுடன் இதயத்துடன் சரியான ஒத்திசைவைக் கொண்டு விளையாட்டை அணுகினீர்கள் என்பதை நான் எப்போதும் ரசிக்கிறேன். கேரம் பந்துகளை கச்சிதமாக வீசுவது முதல் முக்கியமான ரன்கள் எடுப்பது வரை நீங்கள் எப்போதும் இந்தியாவின் வெற்றிக்கான வழியை கண்டறிந்தீர்கள்”

இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டுக்கு இப்போதான் வந்தாரு.. ஆனா அசத்துறாரு.. சக அணி வீரரை பாராட்டிய – ரோஹித் சர்மா

“நீங்கள் நம்பிக்கைக்குரிய இளம் வீரராக இருந்து இந்தியாவின் ஒரு திறமை மேட்ச் வின்னராக வளர்ந்துள்ளது அற்புதமானது. உங்களுடைய மகத்துவமான பயணம் என்பது பயப்படாமல் ஒருவர் சொந்த ஆட்டத்தில் பரிசோதனைகளை செய்து முன்னேற்றுவதற்கான பாதையை காட்டுகிறது. உங்களுடைய மரபு அனைவரையும் ஊக்குவிக்கும். உங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸ்க்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார். இது போக ஏராளமான இந்நாள் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் அஸ்வினுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

- Advertisement -