சர்வதேச கிரிக்கெட்டுக்கு இப்போதான் வந்தாரு.. ஆனா அசத்துறாரு.. சக அணி வீரரை பாராட்டிய – ரோஹித் சர்மா

Akash-Deep
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கி இன்று நடைபெற்ற ஐந்தாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டி பெருமளவு மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

இவரை மாதிரி வீரர் அணிக்கு தேவை :

இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டி டிராவானது குறித்தும், அடுத்ததாக மெல்போர்ன் நகரில் நடைபெற இருக்கும் பாக்சிங் டெஸ்ட் போட்டி குறித்தும் பல்வேறு விடயங்களை பேசி இருந்தார்.

- Advertisement -

அதோடு இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பாலோ ஆனை கடக்க உதவிய வீரர்கள் குறித்தும் அவர் பேசியிருந்தார். அப்படி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில் : இந்த போட்டியில் பாலோ ஆனை கடக்க ராகுல்-ஜடேஜா ஆகியோர் டாப் ஆர்டரிலும், பும்ரா-ஆகாஷ் தீப் ஆகியோர் பின்வரிசையிலும் உதவியிருந்தனர்.

குறிப்பாக ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா ஆகியோர் பேட்டிங் செய்த விதம் எங்களை பாலோ ஆன் ஆகவிடாமல் காப்பாற்றியது என்று கூறலாம். வேகப்பந்து வீச்சாளர்களான அவர்கள் இருவரும் பேட்டிங்கிலும் பயிற்சி செய்து வருகின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா மிகச் சிறப்பான வீரர் என்பது சந்தேகம் இல்லை.

- Advertisement -

ஆகாஷ் தீப் தற்போது தான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இன்னும் அவர் சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை புதிய வீரர் தான். ஆனாலும் வலைப்பயிற்சியின் போது தனது முழு உழைப்பை கொடுக்கிறார். அதன் காரணமாகவே போட்டிகளின் போது அவரது பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பலன்கள் கிடைக்கின்றன.

இதையும் படிங்க : இதோடு நிக்காது.. ஒன்னொன்னு கண்டிப்பா இருக்கு..விராட் கோலியை ஆதரித்த – சவுரவ் கங்குலி

அணிக்கு என்ன தேவையோ அதனை கை தூக்கி முன்னே வந்து செய்யும் முனைப்பு அவரிடம் உள்ளது. அதைத்தான் ஆகாஷ் தீப் செய்து காட்டியுள்ளார். இவரை போன்ற வீரர் இந்திய அணிக்கு நிச்சயம் தேவை என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement