இதோடு நிக்காது.. ஒன்னொன்னு கண்டிப்பா இருக்கு..விராட் கோலியை ஆதரித்த – சவுரவ் கங்குலி

Ganguly
- Advertisement -

கடந்த பல டெஸ்ட் தொடர்களாகவே இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் சரிவை சந்தித்துள்ளது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டெஸ்ட் தொடருக்கு அடுத்து ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்ட இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்த விராத் கோலி இந்த ஆஸ்திரேலியா தொடரில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விராட் கோலி கடைசி 2 போட்டியில் அசத்துவாரு :

அந்த வகையில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சொற்ப ரன்களில் அவர் ஆட்டமிழந்து இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸின்போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டம் இழக்காமல் சதம் அடித்திருந்தார். அதன் காரணமாக எஞ்சியுள்ள தொடரிலும் விராட் கோலியின் பேட்டிங் மிகச் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடிலெய்டு நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் சொதப்பியிருந்தார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 16 பந்துகளில் 3 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்மூலம் அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமான நிலையை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ச்சியாக விராட் கோலிக்கு வெளியே பந்துகளை வீசி ஒரே மாதிரி விக்கெட்டுகளை வீழ்த்தி வருவது அவரது மோசமான பார்மை வெளிகாட்டும் விதமாக அமைந்துள்ளது.

இருந்தாலும் விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர் இந்த சிக்கல்களை எல்லாம் கடந்து நிச்சயம் வெளிவருவார் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி கோலி நிச்சயம் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களில் ஒரு சதம் அடிப்பார் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி ஆஸ்திரேலியா மைதானங்களில் இன்னும் நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்துகளை விட்டு விளையாட வேண்டும். நிச்சயம் அவர் நிதானமாக போட்டியை எதிர்கொண்டால் அவரால் ரன்களை குவிக்க முடியும். என்னை பொறுத்தவரை விராட் கோலிக்கு இருக்கும் திறமைக்கு நிச்சயம் அவர் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு சதம் அடிப்பார் என்று நினைக்கிறேன் .

இதையும் படிங்க : காபா ட்ராவுக்கு பின் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல இந்தியாவின் வாய்ப்பு என்ன? விவரம் இதோ

ஏனெனில் ஏற்கனவே அவர் பெர்த் நகரில் அடித்துள்ள சதம் அவரது பேட்டிங் ஃபார்மை காண்பித்துள்ளது. எனவே அவர் மோசமான பேட்டிங் பார்மில் இல்லை என்று நினைக்கிறேன். இதுபோன்ற சூழலில் நிச்சயம் அவரால் மிகப் பெரிய கம்பேக் கொடுக்க முடியும் என்றும் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement