ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்தது. அந்த நிலையில் காபா மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. அதனால் 1 – 1* (5) என்ற கணக்கில் இந்தத் தொடர் சமனில் இருக்கிறது.
இந்த ட்ரா காரணமாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்ல இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஏனெனில் தற்சமயத்தில் புள்ளிப்பட்டியலில் தென்னாபிரிக்கா 63.33%, ஆஸ்திரேலியா 58.89%, இந்தியா 55.88%, நியூஸிலாந்து 48.21%, இலங்கை 45.45% புள்ளிகளுடன் டாப் 5 இடங்களில் உள்ளன. அதில் ஏற்கனவே இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் வாய்ப்பு இழந்துள்ளன.
இந்தியாவின் வாய்ப்பு:
அதனால் ஃபைனலுக்கு செல்ல தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்திய அணிகளிடம் போட்டி ஏற்பட்டுள்ளது. அதில் தென்னாபிரிக்கா ஃபைனலுக்கு செல்ல பிரகாச வாய்ப்புள்ளது. இந்திய அணியை பொறுத்த வரை ஃபைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் கண்டிப்பாக வென்றாக வேண்டும். அதை செய்தால் 60.52% புள்ளிகளுடன் இந்தியா நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெறும்.
மறுபுறம் இலங்கைக்கு எதிராக அடுத்து நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்றாலும் ஆஸ்திரேலியா வெளியேறும். ஒருவேளை அடுத்த 2 போட்டிகளில் இந்தியா 1 வெற்றி 1 ட்ராவை சந்தித்தாலும் ஃபைனல் செல்ல வாய்ப்புள்ளது. அதற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்து நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை குறைந்தது ஒரு போட்டியை டிரா செய்ய வேண்டும்.
2 வெற்றி அவசியம்:
ஒருவேளை அடுத்த 2 போட்டிகளில் இந்தியா 1 வெற்றி 1 தோல்வியை சந்தித்தால் அடுத்து நடைபெறும் தொடரில் ஆஸ்திரேலியாவை 2 – 0 என்ற கணக்கில் இலங்கை தோற்கடிக்க வேண்டும். அதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அப்படி இல்லையெனில் பாகிஸ்தானுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் விரைவில் தென்னாப்பிரிக்கா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இதையும் படிங்க: இந்தியா ஏன் இப்படி செஞ்சாங்க தெரியல.. மரியாதை தவிர ஒன்னுமில்ல.. அஸ்வினுக்கு ஏமாற்றத்துடன் லயன் வாழ்த்து
அதில் 2 – 0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை பாகிஸ்தான் தோற்கடிக்க வேண்டும். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை 1 வெற்றியை பெற வேண்டும். அப்படி நடந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த 2 போட்டிகளில் 1 வெற்றி 1 தோல்வியை பெற்றாலும் இந்தியா ஃபைனலுக்கு செல்லும். அதே சமயம் ஆஸ்திரேலியாவிடம் 2 போட்டிகளிலும் தோற்றால் இந்தியா வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.



