இந்தியா ஏன் இப்படி செஞ்சாங்க தெரியல.. மரியாதை தவிர ஒன்னுமில்ல.. அஸ்வினுக்கு ஏமாற்றத்துடன் லயன் வாழ்த்து

Nathan Lyon
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் 765 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்கு பின் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராகவும் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

குறிப்பாக 2012 – 2024 வரை சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா தோற்காமல் இருக்க முக்கிய பங்காற்றிய அவர் அதிக தொடர்நாயகன் விருதுகள் வென்ற வீரராகவும் உலக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் வெளிநாடுகளில் அவருக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்குவதில்லை. அதன் காரணமாகவே திடீரென அஸ்வின் ஓய்வு பெற்றதாக கேப்டன் ரோஹித் சர்மா மறைமுகமாக கூறினார்.

- Advertisement -

லயன் ஏமாற்றம்:

இந்நிலையில் 530 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த அஸ்வினுக்கு இந்தத் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்காதது தமக்கு ஆச்சரியத்தை கொடுப்பதாக ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் கூறியுள்ளார். எதிரணியாக இருந்தாலும் அஸ்வினின் சிறந்த நண்பர்களில் ஒருவராக அறியப்படும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அஸ்வினுக்கு மரியாதையைத் தவிர்த்து எதுவுமில்லை. இத்தனை வருடங்களாக அவர் களத்தில் நடந்து கொண்ட விதம் மற்றும் திறன் நம்ப முடியாதது”

“நாங்கள் வித்தியாசமான விஷயங்களில் வித்தியாசமான கருத்தை கொண்டுள்ளோம். ஆனால் அஸ்வின் போன்ற பவுலரிடம் பேசுவது அபரிதமானது. நாங்கள் இருவரும் வித்தியாசமானவர்கள். அதனால் இன்று காலை கூட எங்களுடைய பேச்சுவார்த்தை நன்றாக இருந்தது. நாங்கள் இந்தத் தொடரிலும் வருங்காலத்திலும் நிறைய எதிராக விளையாடுவோம் என்று நம்பினேன். 530 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த ஒருவரை இந்தியா பெஞ்சில் அமர வைத்தது என்னுடைய தலையை சொரிய வைத்தது”

- Advertisement -

லயன் வாழ்த்து:

“ஏனெனில் உலகில் ஒரு சிறந்த ஸ்பின்னர் என்பதை அஸ்வின் நிரூபித்தவர். அது எனக்கு பெரிய ஆச்சரியம். அதே சமயம் 530+ விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின், ஜடேஜா 300+ விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜா பெஞ்சில் இருப்பது தான் இந்திய அணியின் பலமாகும். அது அவர்கள் அணியின் தேர்விலும் தலைவலியை கொடுக்கும்”

இதையும் படிங்க: அதெல்லாம் உண்மையில்ல.. 4வது போட்டியிலும் இந்தியாவை அடிக்க வருவேன்.. ஆட்டநாயகன் டிராவிஸ் ஹெட்

“சக ஆஃப் ஸ்பின்னர் என்ற முறையில் இந்தியாவுக்காகவும் உலக கிரிக்கெட்டுக்காகவும் அசத்திய அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்களைப் பார்த்தது மகிழ்ச்சி, உங்களுக்கு எதிராக விளையாடியது உங்களுடன் போட்டியிட்டதும் மகிழ்ச்சி. உங்களது அற்புதமான கேரியருக்கு வாழ்த்துக்கள். அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்று ஏமாற்றத்துடன் பேசினார்.

Advertisement