ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. அந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது. காபா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 145, ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித், விராட் கோலி, ஜெய்ஸ்வால் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 74-5 என திணறிய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி 84, ஜடேஜா 77 ரன்கள் எடுத்தனர்.
ஆட்டநாயகன் ஹெட்:
கடைசியில் பும்ரா 10*, ஆகாஷ் தீப் 31 ரன்கள் அடித்து இந்தியாவை ஃபாலோ ஆன் பெறுவதில் இருந்து காப்பாற்றினார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா திணறலாக பேட்டிங் செய்து 89-7 ரன்கள் எடுத்த போது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் 22 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 275 ரன்களை துரத்திய இந்தியா 8-0 ரன்கள் எடுத்த போது மழை வந்ததால் போட்டி டிராவில் முடிந்தது. 152 ரன்கள் குவித்த டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருது வென்றார். முன்னதாக இந்தப் போட்டியில் லேசான காயத்தை சந்தித்த அவர் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்ற செய்திகள் வெளியாகின.
காயம் இல்ல:
ஆனால் அது உண்மையில்லை என்று தெரிவிக்கும் ஹெட் அடுத்த போட்டியிலும் இந்தியாவை அடிக்க வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மழையால் பேட்டிங் செய்து நீண்ட நேரமாகி விட்டது என்பது போல் உணர்கிறேன். சவாலான பிட்ச்சில் அணிக்கு பங்காற்றி முதல் இன்னிங்ஸை செட்டிங் செய்ததில் மகிழ்ச்சி”
இதையும் படிங்க: 14 வருஷம் நண்பா.. கலங்கிட்டேன் நீங்க இந்திய கிரிக்கெட்டின் லெஜெண்ட்.. அஸ்வினை வாழ்த்திய விராட் கோலி
“சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாட முயற்சித்ததை இந்த தொடரில் நன்றாக செய்தேன் என்று நான் நினைக்கிறேன். ஸ்டீவ் ஸ்மித் நல்ல ரிதத்தில் உள்ளார். அவருடன் பேட்டிங் செய்து மகிழ்ச்சியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தது எனக்கும் நல்ல தன்னம்பிக்கையை கொடுத்தது. முதலில் களத்திற்கு சென்றதும் சவால்களை கடந்து செல்ல முயற்சிக்கிறேன். பின்னர் பல்வேறு பிரச்சினைகளையும் சமாளிக்க முயற்சிக்கிறேன். கொஞ்சம் காயம் தான். ஆனால் அடுத்த போட்டிக்கு முன்பாக நான் நன்றாக இருப்பேன்” என்று கூறினார்



