சின்னப்புள்ள மாதிரி கம்பிளைண்ட் பண்ணாதீங்க, ஆஸ்திரேலியர்களுக்கு சச்சின் – ரவி சாஸ்திரி கொடுத்த பதிலடி என்ன

- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் துவங்கியது. இத்தொடரில் குறைந்தது 3 போட்டிகளை வென்று ஜூலை மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் எண்ணத்துடன் இந்தியா களமிறங்குகிறது. ஆனால் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா கடைசி 2 தொடர்களில் தங்களது சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. ஐசிசி தரவரிசையில் டாப் 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளில் ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருப்பதால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தொடரில் கடந்த ஒரு மாதமாகவே மைதானங்களை பற்றிய விவாதம் அனலாக பறந்து வருகிறது என்று சொல்லலாம்.

Steve Smith Harsha Bhogle

- Advertisement -

முதலில் கடந்த 2017 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் பயிற்சி போட்டிகளுக்கு ஒரு வகையான பிட்ச் கொடுத்ததாக தெரிவித்த ஸ்டீவ் ஸ்மித் முதன்மைப் போட்டிகளில் சுழலுக்கு சாதகமான பிட்ச் கொடுக்கப்பட்டதாக ஸ்லெட்ஜிங் போரை ஆரம்பித்து வைத்தார். அந்த நெருப்பில் இம்முறையும் நியாயமற்ற வகையில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்பதால் நிச்சயமாக இந்தியா தான் வெல்லும் என்று முன்னாள் வீரர் இயன் ஹீலி எண்ணையை கொஞ்சம் ஊற்றினார்.

சச்சின் பதிலடி:
அந்த நிலையில் நாக்பூரில் நடைபெறும் முதல் போட்டியில் தங்களது பேட்டிங் வரிசையில் இருக்கும் 6 இடது கை பேட்ஸ்மேன்களை இடது கை ஸ்பின்னர்களை வைத்து தாக்குவதற்காக வேண்டுமென்றே இருபுறங்களின் வலது பக்கத்தில் காய்ந்த பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்டீவ் ஸ்மித் அதிருப்தி தெரிவித்தார். அந்த வகையில் இந்தியா வேண்டுமென்றே வெற்றி பெறுவதற்காக பிட்ச் உருவாக்கியுள்ளதாக வசைபாடிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் ஊடகங்களும் ஐசிசி இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொந்தளித்தனர்.

Sachin

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் நீங்கள் உலகின் அனைத்து பிட்ச்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டுமே தவிர அதை விட்டுவிட்டு இப்படி குறை சொல்லக்கூடாது என்று இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் சர்வதேச கிரிக்கெட் வீரராக வந்த பின் உலகின் அனைத்து வகையான பிட்ச்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் போது அங்கு சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்க மாட்டோம்”

- Advertisement -

“ஏனெனில் அங்கு இயற்கையாகவே வேகம், பவுன்ஸ் ஆகிய அம்சங்கள் மைதானத்தில் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். அதே போல ஆஸ்திரேலிய அணியினர் இந்தியாவுக்கு வந்தால் இங்கே இயற்கையாக சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்பதை அறிவார்கள். ஆஸ்திரேலியா அதற்கு தயாராகவே வந்துள்ளார்கள். உலகின் ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய திறமைக்கு எப்போதும் தயாராகவே வருவார்கள். எனவே இதற்கு ஆஸ்திரேலியா தயாராக வந்து சவாலை எதிர்கொள்வார் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

Shastri

அதாவது சின்ன குழந்தைகளை போல் குற்றம் சொல்லாமல் சர்வதேச கிரிக்கெட் என்று வந்து விட்டால் அனைத்து வகையான மைதானங்களிலும் விளையாட தயாராக இருக்க வேண்டும் என்பதை ஆஸ்திரேலியர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை என்பதை சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டியுள்ளார். இது பற்றி ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்தது பின்வருமாறு. “நாக்பூர் மைதானம் பற்றி நிறைய பேச்சுக்கள் காணப்படுகின்றன. ஆனால் அந்த பிட்ச் என்பதை 2 அணிகளுக்கும் பொதுவானது. பந்து முதல் நாளிலேயே சுழன்றால் என்ன? அது சொந்த அணிக்கு சாதகமாக இருக்கும். 2 அணிகளும் அதில் விளையாட வேண்டும்”

இதையும் படிங்க:ஆஸி தொடரை வென்றால் பைனல் வாய்ப்புடன் காத்திருக்கும் தனித்துவமான உலக சாதனை – இந்தியா சரித்திரம் படைக்குமா

“அத்துடன் அவை அனைத்தையும் போட்டியின் நடுவர் கண்காணிப்பார். மேலும் நாங்கள் எப்போதும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பிட்ச்களை பற்றி குற்றம் சொல்வதில்லை. குறிப்பாக போட்டி 3 நாளில் முடிந்தாலும் எனது கேரியரில் நான் எப்போதும் அதை கூறியதில்லை. அத்துடன் சமீபத்தில் காபாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் 3வது நாள் காலையில் அப்போட்டியை பார்த்த போது அங்கே கிரிக்கெட் நடைபெறவே இல்லை” என்று கூறினார்.

Advertisement