ஆஸி தொடரை வென்றால் பைனல் வாய்ப்புடன் காத்திருக்கும் தனித்துவமான உலக சாதனை – இந்தியா சரித்திரம் படைக்குமா

IND
- Advertisement -

வரலாற்றின் 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பிக்கும் வகையில் ஐசிசி அறிமுகப்படுத்திய இந்த தொடரில் விராட் கோலி தலைமையில் சக்கை போடு போட்ட இந்தியா சௌதம்டன் நகரில் நடைபெற்ற மாபெரும் பைனலில் வழக்கம் போல சொதப்பி நியூசிலாந்திடம் தோற்றது. அதை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு துவங்கிய 2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை லீக் சுற்றில் ஆரம்பத்தில் தடுமாறிய இந்தியா ஒரு வழியாக போராடி இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகளின் முடிவில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

AUs vs IND

- Advertisement -

அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிப்ரவரி 9 முதல் துவங்கும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் குறைந்தபட்சம் 3 போட்டிகள் வென்றால் வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறலாம் என்ற நிலைமையில் இந்தியா களமிறங்குகிறது. ஆனால் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா 2018/19, 2020/19 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்த்து 2004க்குப்பின் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் போராட உள்ளது.

காத்திருக்கும் உலக சாதனை:
இருப்பினும் என்ன தான் உலகின் நம்பர் ஒன் அணியாக ஆஸ்திரேலியா இருந்தாலும் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இம்முறையும் வென்று பைனலுக்கு செல்லும் என்பதில் இந்திய ரசிகர்கள் உறுதியாக இருக்கின்றனர். முன்னதாக விராட் கோலிக்கு பின் புதிய கேப்டனாக ஒரு பெற்ற ரோகித் சர்மா தலைமையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோற்றாலும் இருதரப்பு தொடர்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற இந்தியா 2016க்குப்பின் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக முன்னேறி சாதனை படைத்தது.

India

அதே போல் 2023 புத்தாண்டில் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் வென்ற இந்தியா ஐசிசி ஒருநாள் தரவரிசையில் புதிய உலகின் நம்பர் ஒன் அணியாக சமீபத்தில் முன்னேறி மற்றுமொரு சாதனை படைத்தது. அந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் ஏற்கனவே 2016 – 2021 வரை தொடர்ந்து விராட் கோலி தலைமையில் நம்பர் ஒன் அணியாக இருந்த இந்தியா அதன் பின் சந்தித்த சில தோல்விகளால் தற்போது 2வது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரை குறைந்தபட்சம் 2 – 0 அல்லது அதற்கு மேற்பட்ட வித்தியாசத்தில் வெல்லும் பட்சத்தில் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையிலும் ஆஸ்திரேலியாவை முந்தி இந்தியா உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக மீண்டும் முன்னேறுவதற்கு பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் நிலையில் இந்தியா 115 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ஆனால் டாப் 2 அணிகளும் தற்போது நேருக்கு நேர் மோதுவதால் அதில் வெல்லும் அணி தோற்கும் அணியின் புள்ளிகளை அப்படியே பெறும்.

IND

குறிப்பாக ஆஸ்திரேலியா தோற்றால் அதன் புள்ளிகள் அப்படியே இந்தியாவுக்கு வந்து முதலிடத்தை பிடிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தும். அப்படி சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா இத்தொடரில் ஆஸ்திரேலியாவை முந்தி நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே நேரத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த அணி என்ற தென்னாப்பிரிக்காவின் உலக சாதனையை சமன் செய்து புதிய சரித்திரம் படைக்கும்.

இதையும் படிங்க: IND vs AUS : இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றப்போவது யார் ? – ரவி சாஸ்திரியின் கணிப்பு இதோ

இதற்கு முன் கடந்த 2014ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மட்டுமே உலகிலேயே முதலும் கடைசியுமாக 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே நேரத்தில் முதலிடம் பிடித்தது. அதற்கு அடுத்தபடியாக அந்த சாதனை படைப்பதற்கு ஏற்பட்டுள்ள பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி புதிய சரித்திரம் படைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற்று இந்தியா ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement