IND vs AUS : இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றப்போவது யார் ? – ரவி சாஸ்திரியின் கணிப்பு இதோ

shastri
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்குகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கத்தை செலுத்தி வரும் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் இந்திய மண்ணில் நடைபெறும் இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

IND-vs-AUS

- Advertisement -

ஏனெனில் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோன்று 2004-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை கைப்பற்றாத ஆஸ்திரேலியா அணி பேட் கம்மின்ஸ் தலைமையில் தற்போது முழு பலத்துடன் இம்முறை இந்த தொடரை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கின்றனர்.

அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்ல இந்திய அணி தங்களது முனைப்பை காட்டவுள்ளது. இப்படி இரண்டு அணிகளும் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தும் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

Washington-Sundar

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றப்போவது இந்தியா தான் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி நான்குக்கு பூஜ்யம் (4-0) என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும்.

- Advertisement -

தற்போது உள்ள கால சூழ்நிலை, மைதானத்தின் தன்மை என அனைத்தையும் கணித்து தான் இந்த விடயத்தை கூறுகிறேன். இந்திய மண்ணில் இந்திய அணியைத் தவிர வேறு எந்த அணியாலும் ஆதிக்கத்தை செலுத்த முடியாது. அதற்கு காரணம் யாதெனில் நம்மிடம் அஸ்வின், ஜடேஜா, அக்சர், குல்தீப் என தரமான நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். எனவே ஆஸ்திரேலியா வீரர்களால் ஒருநாள் முழுவதும் தாக்குப் பிடித்து நிற்பது மிகவும் கடினம்.

இதையும் படிங்க : IND vs AUS : அஷ்வினுக்கு எதிரா இதை மட்டும் பண்ணுங்க. அதுவே போதும் – இயான் சேப்பல் அட்வைஸ்

அந்த வகையில் தான் கூறுகிறேன் நிச்சயம் ஆஸ்திரேலியா அணி இம்முறை இந்திய அணியிடம் பெரிய அளவில் தோல்வியை சந்திக்கும். வெளிநாடுகளிலேயே இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வேளையில் இந்திய மைதானங்களில் நமது ஆட்டம் இன்னும் மிகச் சிறப்பாக இருக்கும் என்று ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement