IND vs AUS : அஷ்வினுக்கு எதிரா இதை மட்டும் பண்ணுங்க. அதுவே போதும் – இயான் சேப்பல் அட்வைஸ்

Chappell
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ள நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட தயாராக காத்திருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையே பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் வீரரான இயான் சேப்பல் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். ஏற்கனவே இந்திய மண்ணில் அஷ்வினின் பந்துவீச்சில் ஆஸ்திரேலியா வீரர்கள் தடுமாறிய வேளையில் இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக முன்கூட்டியே இந்தியா வந்த அவர்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி அஷ்வினை போன்றே செயல்படும் உள்ளூர் பந்துவீச்சாளர் ஒருவரையும் வலைப்பயிற்சிக்கு அழைத்து அவருக்கு எதிராக பேட்டிங் பயிற்சியையும் மேற்கொண்டனர். இப்படி அஷ்வினுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் பல்வேறு வகையில் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

இவ்வேளையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இயான் சேப்பல் அஷ்வினின் பந்துவீச்சை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்த தனது கருத்தினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : அஸ்வின் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் தான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவருக்கு எதிராக எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று நிறைய யோசிக்கிறீர்கள்.

- Advertisement -

ஆனால் இது போன்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடும் போது அஸ்வினுக்கு எதிராக விளையாடுகையில் பெரிதாக உங்களிடம் உள்ள திறன்களை மாற்றிக்கொள்ள வேண்டாம். அவருக்கு எதிராக நீங்கள் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடித்து குவிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இதையும் படிங்க : விபத்திற்கு பிறகு முதன்முறையாக தனது உடல்நிலை குறித்த கருத்தினை பதிவிட்ட ரிஷப் பண்ட் – வைரலாகும் புகைப்படம்

அவர் வீசும் பந்துகளில் அவ்வப்போது சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தாலே போதும் அஸ்வின் திட்டம் நிச்சயம் மாறும். அவர் தன்னுடைய கவனத்தில் இருந்து வெளியேறுவார். எனவே அஸ்வினுக்கு எதிராக சிங்கள்சை மட்டும் விளையாடுங்கள் என்று அவர் அறிவுரை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement