விபத்திற்கு பிறகு முதன்முறையாக தனது உடல்நிலை குறித்த கருத்தினை பதிவிட்ட ரிஷப் பண்ட் – வைரலாகும் புகைப்படம்

Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி டெல்லியில் இருந்து உத்தரகாண்டில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பும் போது தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதன் காரணமாக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷப் பண்டிற்கு தற்போது சிகிச்சைகள் முடிவடைந்து காயங்கள் ஆறும் வகையில் ஓய்வில் இருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் உடலில் உள்ள காயங்கள் சரியாகி அவர் உடல்நலம் தேறி வருவதற்கு சுமார் ஆறு மாத காலம் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் இந்த ஆண்டில் பெரும்பாலான தொடர்களில் அவரால் விளையாட முடியாது.

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய ரிஷப் பண்ட் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் வீட்டில் இருந்தே காயம் சரியாகும் வரை ஓய்வெடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

RP

இந்நிலையில் இந்த விபத்திற்கு பிறகு ஒரு மாதம் கடந்த நிலையில் தற்போது ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தனது உடல்நிலை குறித்த ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் குறிப்பிட்டதாவது : வெளியே அமர்ந்து புதிய காற்றை சுவாசிக்கிறேன். இதுவே நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியாவை பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? மொத்த ஆஸ்திரேலியர்களுக்கும் கவாஸ்கர் மாஸ் பதிலடி என்ன

அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி உள்ள வேலையில் விரைவில் அவர் குணமடைந்து கிரிக்கெட் களத்திற்கு திரும்ப வேண்டும் என ரசிகர்களும் அவரது இந்த பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement