அந்த நாள் சச்சினுக்காக டிராவிட் டிரா பண்ணாம இருந்திருக்கலாம் ஆனால் – புகழ்பெற்ற டிரா பற்றி யுவராஜ் சிங்

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் ஒரு அணி தங்களது பேட்ஸ்மேன்களின் ஆதிக்கத்தால் 400 – 500 என பெரிய ரன்களை எட்டிய பின் டிக்ளேர் செய்வது வழக்கமான ஒன்றாகும். அவ்வளவு பெரிய ரன்களை எட்டுவதற்கு ஏதேனும் ஒருசில பேட்ஸ்மென்கள் சதங்கள் அல்லது இரட்டை சதங்கள் அடுத்திருப்பார்கள். அதிலும் ஒரு சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு பெரிய ஸ்கோரை எட்டியதும் ஒரு பேட்ஸ்மேன் 50, 100, 200 போன்ற மைல்கள் ரன்களை நெருங்கும் தருணங்களில் அவர்கள் அதை அடித்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் அந்த இன்னிங்ஸ்சை டிக்ளேர் செய்வதற்கு பெரும்பாலான கேப்டன்கள் வெளிப்படையாகவே தாமதம் செய்வார்கள்.

Jadeja-1

- Advertisement -

ஆனால் அரிதினும் அரிதாக ஏதேனும் ஒருசில கேப்டன்கள் மட்டும் ஒரு வீரரின் சொந்த சாதனையை விட நாட்டின் வெற்றியே முக்கியம் எனக்கருதி அந்த பேட்ஸ்மேன் சதம் அடிக்கவில்லை என்றாலும் டிக்ளேர் செய்து விடுவார். அதுபோன்ற நிகழ்வு 2004இல் இந்திய கிரிக்கெட்டில் நடந்தது இன்றுவரை சர்ச்சையாக இருந்து வருகிறது. ஆம் பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை புரட்டி எடுத்த விரேந்தர் சேவாக் அதிரடியாக 309 ரன்களை விளாசி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முச்சதம் அடித்த முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.

ட்ரா செய்த டிராவிட்:
அவருடன் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது பங்கிற்கு அற்புதமாக பேட்டிங் செய்து 194* ரன்கள் எடுத்து இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போது யாருமே எதிர்பாராத வகையில் அப்போதைய இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் இந்தியாவின் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். அதனால் ஒரு எளிமையான இரட்டை சதத்தை அடிக்கும் வாய்ப்பை சச்சின் டெண்டுல்கர் இழந்த காரணத்தால் இன்று வரை நிறைய சச்சின் ரசிகர்கள் டிராவிட் மீது அதற்கான கோபத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்துவதை பார்க்க முடிகிறது.

dravid

அதிலும் அந்த சமயத்தில் தமக்கு போட்டியாக சச்சின் இருந்ததால் அவரை இரட்டை சதம் அடிக்க விடக்கூடாது என்ற நோக்கத்திலேயே டிராவிட் அவ்வாறு நடந்து கொண்டதாக நிறைய சச்சின் ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் அன்றைய நாளில் சச்சின் இரட்டை சதம் அடிக்க கேப்டனாக ஒரு ராகுல் டிராவிட் விட்டிருக்க வேண்டும் என அந்த போட்டியில் விளையாடிய மற்றொரு முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

டிராவிட் விட்டிருக்கலாம்:
அந்தப் போட்டியில் சேவாக் அவுட்டான பின் சச்சினுடன் ஜோடி சேர்ந்து 110 பார்ட்னர்ஷிப் அமைத்து 59 (66) ரன்கள் விளாசிய யுவராஜ் சிங் அந்த நடந்தது பற்றி தற்போது பேசியுள்ளது பின்வருமாறு. “விரைவில் டிக்ளேர் செய்ய இருக்கிறோம் என்பதால் வேகமாக பேட்டிங் செய்யுமாறு அந்த போட்டியின் இடையே எங்களுக்கு செய்தி வந்தது. இருப்பினும் அடுத்த ஓவரில் அவர் (சச்சின்) அந்த 6 ரன்களை அடித்திருக்க முடியும். மேலும் அதன்பின் நாங்களும் அதே 8 – 10 ஓவர்களை வீசியிருக்க முடியும். ஏனெனில் வெறும் ஒருசில ஓவர்கள் அந்த டெஸ்ட் போட்டியில் மிகபெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கிறது”

“ஒருவேளை அந்த தருணம் போட்டியின் 3 அல்லது 4-வது நாட்களாக இருந்தால் நீங்கள் அணியின் நலனுக்காக அதுவும் அவர் 150 ரன்களில் இருந்திருந்தாலும் கூட அந்த முடிவை எடுத்திருக்கலாம். அதுபோன்ற சமயங்களில் சூழ்நிலையை பொருத்து நிறைய கருத்துக்கள் இருந்தன. எனவே என்னைப் பொறுத்தவரை அன்றைய நாளில் அவர் (சச்சின்) 200 ரன்களை அடித்த பின்பு டிக்ளேர் செய்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -

சச்சின் அதிருப்தி:
அதாவது அந்த டிக்ளேர் செய்த தருணம் போட்டியின் 2-வது நாள் என்பதால் கண்டிப்பாக சச்சினை இரட்டை சதம் அடிக்க விட்டிருக்கலாம். ஒருவேளை பரபரப்பான கடைசி நாளாக இருந்திருந்தால் டிராவிட் அவ்வாறு முடிவெடுத்தது சரி என ஏற்றுக்கொண்டு இருந்திருக்கலாம் எனக்கூறும் யுவராஜ் சிங் அன்றைய நாளில் அவர் எடுத்த முடிவு நியாயமான முடிவல்ல என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : ரோஹித்தும், பும்ராவும் ஓய்வு கேட்டால் கொடுக்கவே கூடாது – ரசிகர்கள் கொந்தளிப்பு (என்ன காரணம்?)

இதே தருணத்தைப் பற்றி 2015இல் சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதை புத்தகத்திலும் குறிப்பிட்டிருந்தது பின்வருமாறு. “அதற்காக நான் ஏமாற்றம் அடைந்ததாக கேள்விப்பட்ட ராகுல் டிராவிட் என்னிடம் பேச வந்தார். அப்போது நான் அவரிடம் அப்படி டிக்ளேர் செய்வதன் பின்னணியை பற்றிக் கேட்டேன். ஏனெனில் 194 ரன்கள் தன்னிச்சையாக இருந்தாலும் அதை அணியின் உதவிக்காக தானே நான் அடித்தேன். அந்த முடிவு அணியின் நன்மைக்காக இருந்திருந்தாலும் சரியானதல்ல” என்று அதிருப்தி தெரிவித்திருந்தார்.

Advertisement