ரோஹித்தும், பும்ராவும் ஓய்வு கேட்டால் கொடுக்கவே கூடாது – ரசிகர்கள் கொந்தளிப்பு (என்ன காரணம்?)

Bumrah-1
Advertisement

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய 15-வது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி மிகப் பெரிய தடுமாற்றத்தை தொடரின் ஆரம்பத்திலேயே சந்தித்தது. ஏனெனில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த வருட பிளே ஆப் சுற்றில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறி விட்டது என்றே கூறலாம். இனிவரும் நான்கு போட்டிகளில் மும்பை அணி தொடர்ச்சியாக பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் கூட அவர்களுக்கு சிறிதளவுகூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இல்லை.

MI vs LSG

இப்படி இருக்கும் வேளையில் இந்திய அணிக்காக விளையாடி வரும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் இந்த ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் ஓய்வு எடுத்துக்கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது. ஏனெனில் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டி20 உலக கோப்பையில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்த ஒரு சில நாட்களில் தென்னாபிரிக்க தொடரும் நடைபெற இருக்கிறது. இப்படி அடுத்தடுத்து முக்கிய தொடர்கள் இருப்பதால் ரோகித் சர்மா, பும்ரா போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு முக்கியமான வீரர்கள் என்பதனால் இப்போது ஐபிஎல் தொடரில் அவர்கள் தொடர்ச்சியாக இரண்டு மாதம் விளையாடிவிட்டு அடுத்ததாக விளையாடுவது மிக கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஐ.பி.எல் தொடரின் கடைசி கட்ட போட்டிகளில் அவர்கள் ஓய்வு எடுக்கலாம் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

bumrah

இப்படி ஐபிஎல் தொடரில் இடைவிடாமல் அவர்கள் இருவரும் விளையாடி வரும் வேளையில் அடுத்ததாக தென் ஆப்ரிக்க தொடரில் அவர்கள் அணியில் இருந்து வெளியேறி ஓய்வினை கேட்டால் பிசிசிஐ வழங்கக்கூடாது என்றும் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். ஏனெனில் ஐபிஎல் தொடரில் இருக்கும் நாட்களிலேயே சற்று தங்களை மனதளவில் தயார் படுத்திக்கொண்டு ஓய்வு எடுத்துக்கொண்டால் அது நல்லது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இடைவிடாது விளையாடி வரும் அவர்கள் தேசிய அணிக்காக விளையாட வரும் போது ஓய்வு கேட்டால் அது சரியாக இருக்காது.

- Advertisement -

அப்படி அவர்கள் தென்னைப்பிரிக்க தொடரில் ஓய்வினை கேட்டால் அவர்களுக்கு ஓய்வு வழங்க கூடாது என்று கொந்தளித்து வருகின்றனர். அதேவேளையில் இந்த ஐபிஎல் தொடரை பொறுத்துதான் இந்திய அணியின் உலக கோப்பை அணி தேர்வு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதால் உலகக் கோப்பையின் அணி தேர்வில் பல சிக்கல்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கொஞ்சம் கூட ஈகோ பார்க்காமல் ஜடேஜா எடுத்த இந்த முடிவு மிகச்சரியான ஒன்று – க்ரீம் ஸ்வான் பாராட்டு

ஏனெனில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பல வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே வேளையில் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பல வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால் பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு ஆகியோர் எவ்வாறு உலகக்கோப்பை அணியை தேர்வு செய்யப்போகிறார்கள் என்பதில் பெரிய குழப்பமே ஏற்பட்டுள்ளது.

Advertisement