கொஞ்சம் கூட ஈகோ பார்க்காமல் ஜடேஜா எடுத்த இந்த முடிவு மிகச்சரியான ஒன்று – க்ரீம் ஸ்வான் பாராட்டு

Swann
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது சிஎஸ்கே அனைத்து அவ்வளவு குதூகலமாக அமையவில்லை என்றே கூறலாம். ஏனெனில் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். பின்னர் ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கேப்டன்சியில் சிறிதளவும் அனுபவமில்லாத ஜடேஜா தொடர்ச்சியாக போட்டிகளில் தோற்று வந்தார்.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

குறிப்பாக ஜடேஜா தலைமையில் முதல் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு மங்கத் தொடங்கிய வேளையில் சென்னை அணியின் கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடம் வழங்கிவிட்டு ஜடேஜா அந்த பதவியில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு தோனியின் தலைமையில் விளையாடிய சென்னை அணி அதில் ஒரு வெற்றி ஒரு தோல்வியை பெற்றது.

இதன் காரணமாக நடப்பு தொடரின் பிளே ஆப் சுற்றில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறும் நிலையில் உள்ளது என்றே கூறலாம். இந்த இக்கட்டான வேளையில் ஜடேஜா எடுத்த முடிவு குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரேம் ஸ்வான் ஜடேஜா எடுத்த முடிவு குறித்து பாராட்டிப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Jadeja

ஒவ்வொரு வீரருக்கும் ஒரு அணியை எதிர்த்து விளையாட பிடிக்கும். அந்த வகையில் பெங்களூர் அணிக்கு எதிராக எப்போதுமே ஜடேஜா சிறப்பாக விளையாடுவார். பெங்களூர் அணிக்கு எதிராக அவரது கேப்டன்சியும் நன்றாக இருந்தது. ஆனால் அதைத் மற்ற எந்த அணிக்கு எதிராகவும் அவர் கேப்டன்சி சரியாக இல்லை.

- Advertisement -

இதிலிருந்து அவருக்கு கேப்டன்சி செய்ய வரவில்லை என்பதே உண்மை இருந்தாலும் நாம் இதுபோன்ற பதவியில் இருக்கும்போது அதனை விட்டுக்கொடுப்பது பலராலும் முடியாது. ஏனென்றால் எப்போதுமே நமக்குள் இருக்கும் ஈகோ நம்மைத் தடுக்கும். ஆனால் ஜடேஜா சிஎஸ்கே அணியின் இந்த விவகாரத்தில் தனக்கு கேப்டன் பொறுப்பு செட்டாகாது என்று கருதி அதை மீண்டும் தோனியிடமே வழங்கியது ஒரு சிறப்பான முடிவு.

இதையும் படிங்க : இதோட எல்லாம் முடிஞ்சிபோச்சின்னு நெனச்சிட்டேன். ஆனா நல்லவேளை – மனம்திறந்த ஜோப்ரா ஆர்ச்சர்

அவர் எந்தவித ஈகோவும் இன்றி இந்த முடிவை எடுத்துள்ளது மகிழ்ச்சி என கூறினார். மேலும் ஒரு சாதாரண வீரராக விளையாடும் போது நிச்சயம் அவரால் சிஎஸ்கே அணிக்கு முழுமையான பங்களிப்பை வழங்க முடியும் என்றுதான் உறுதியாக நம்புவதாகவும் ஸ்வான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement