இதோட எல்லாம் முடிஞ்சிபோச்சின்னு நெனச்சிட்டேன். ஆனா நல்லவேளை – மனம்திறந்த ஜோப்ரா ஆர்ச்சர்

Archer
Advertisement

இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டை பூர்வீகமாக கொண்டாலும் இங்கிலாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்து அங்கு உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியான தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தேசிய அணிக்கு தேர்வானார். அதோடு உலகெங்கிலும் நடைபெற்று வந்த டி20 தொடர்களிலும் விளையாடினார். பின்னர் இங்கிலாந்து அணியின் தேசிய குடியுரிமை கிடைத்த பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகிய அவர் 50 ஓவர் உலகக் கோப்பை வென்ற அணியில் முக்கிய வீரராக இடம் பெற்றிருந்தார்.

Archer

இதுவரை இங்கிலாந்து அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள் மற்றும் 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் தனது வேகத்திலும் துல்லியமான பந்து வீசினாலும் சர்வதேச அளவில் புகழ் பெற்றார். ஆனால் கடந்த ஓராண்டிற்கும் மேலாகவே அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் தற்போது இரண்டு அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு தான் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப இருப்பது குறித்து பேசியுள்ள அவர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : எனக்கு முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் முறையாக கடந்த ஆண்டு மே மாதம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்கு பின்னர் நான் சரியாகி விட்டேன் என்பதனால் மீண்டும் கிரிக்கெட் விளையாடலாம் என்று நம்பிக்கையாக போட்டிகளில் பங்கேற்று விளையாடினேன். ஆனால் மீண்டும் நான் விளையாட துவங்கிய போதுதான் அந்த சிகிச்சை பலன் அளிக்கவில்லை என்று எனக்கு தெரிந்தது.

Archer 3

நான் தொடர்ச்சியாக பந்துவீசும் போது அசௌகரியத்தை சந்தித்தேன். அதன் காரணமாக உடனடியாக மீண்டும் தேசிய அணியில் இருந்து வெளியேறினேன். அதன் பிறகு டிசம்பர் மாதம் இரண்டாவது முறையாக எனது முழங்கையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது ஐந்து மாதங்களாக ஓய்வில் இருக்கிறேன். இப்போது தான் நான் மெல்ல மெல்ல படிப்படியாக குணமடைந்து வருகிறேன்.

- Advertisement -

இந்த அறுவை சிகிச்சைகள் எல்லாம் முடிந்த போது என்னால் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அந்த அளவுக்கு மனதளவில் மிகவும் நொந்து போனேன். ஆனால் கடவுளின் அருளால் தற்போது என் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. நான் படிப்படியாக சிக்கல்களில் இருந்து மீண்டு வருகிறேன். அதேபோன்று இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வாரியமும் எனக்கு பக்கபலமாக இருந்து நம்பிக்கை அளித்து வருகிறது.

இதையும் படிங்க : சிராஜ் மீண்டும் சிறப்பாக பவுலிங் செய்யனுனா அது அவரால மட்டும் தான் முடியும் – முன்னாள் வீரர் அறிவுரை

அதோடு நான் தேசிய அணி வீரர்களின் பட்டியலின் ஒப்பந்தத்திலும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறேன். நிச்சயம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவேன் என ஆர்ச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement