சிராஜ் மீண்டும் சிறப்பாக பவுலிங் செய்யனுனா அது அவரால மட்டும் தான் முடியும் – முன்னாள் வீரர் அறிவுரை

Advertisement

பல எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இதில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்க ஆரம்பத்திலேயே தொடர் தோல்வியை பெற்ற சென்னை மற்றும் மும்பை ஆகிய 2 அணிகளை தவிர எஞ்சிய 8 அணிகளிடம் கடும் போட்டி நிலவுகிறது. இதில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட டுப்லஸ்ஸிஸ் தலைமையில் புத்துணர்ச்சியாக விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 6 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பெற்று புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

சொதப்பும் சிராஜ்:
தற்போதைய சூழ்நிலையில் எஞ்சிய 3 போட்டிகளில் தடுமாறாமல் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடலாம் என்ற நிலையில் பெங்களூரு உள்ளது. ஆனால் அதற்கேற்றார்போல் அந்த அணி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறது. பேட்டிங்கில் டுப்லஸ்ஸிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தேவையான ரன்கள் அடித்தாலும் அதை தொடர்ச்சியாக தடுமாறாமல் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். அதேபோல் பந்துவீச்சில் குறிப்பாக வேகப்பந்து வீச்சில் ஹேசல்வுட், ஹர்சல் படேல் ஒவ்வொரு போட்டியிலும் முடிந்த அளவுக்கு சிறப்பாக பந்துவீசி வெற்றிக்கு பாடுபடுகின்றனர்.

- Advertisement -

ஆனால் அவர்களுக்கு 3-வது பவுலராக கைகொடுக்க வேண்டிய முகம்மது சிராஜ் இதுவரை பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்காமல் சுமாராக செயல்பட்டு வருவது நாக் – அவுட் சுற்றுக்கு முன்பாக பெங்களூரு அணி நிர்வாகத்தை கவலையடைய வைத்துள்ளது. ஆரம்ப காலகட்டங்களில் ரன்களை வாரி வழங்கியதால் அசோக் திண்டா ஆர்மியின் வாரிசு என கிண்டலடிக்கப்பட்ட அவர் அதன்பின் தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு 2020, 2021 ஆகிய ஐபிஎல் தொடர்களில் மிகச் சிறப்பாக பந்து வீச தொடங்கினார்.

தோனியை பாலோ பண்ணுங்க:
அதன் காரணமாகவே ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி ஆகியோருக்குப் பின் இந்தியாவின் முதன்மையான பவுலராக உருவெடுக்க தொடங்கினார். குறிப்பாக கடந்த சீசனில் 6.78 என்ற சிறப்பான எக்கனாமியில் பந்து வீசிய அவரை 7 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு பெங்களூர் அணி நிர்வாகம் தக்க வைத்திருந்தது. ஆனால் அதற்கேற்றார் போல் செயல்படாத முகமது சிராஜ் இந்த வருடம் 8 விக்கெட்டுகளை எடுத்தாலும் மீண்டும் 9.48 என்ற மோசமான எக்கனாமியில் பந்து வீசி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் 2007 காலகட்டத்தில் இந்தியாவிற்காக இதேபோல் சுமாராக பந்துவீசிய ஜோகிந்தர் சர்மாவை அப்போதைய கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி மிகச் சிறப்பாக பயன்படுத்திய யுத்தியை பெங்களூரு கேப்டன் டுப்லஸ்ஸிஸ் பின்பற்ற வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் டபிள்யூவி ராமன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உங்களுக்கு ஜோகிந்தர் சர்மா ஞாபகம் உள்ளதா? அவரை தோனி தான் சிறப்பாக பந்து வீச உந்தினார். அவரைப்போலவே இவரும் (சிராஜ்) பரபரப்பான இக்கட்டான சூழ்நிலைகளில் கேப்டன் சொல்வதை ஏற்று எதையும் செய்யக்கூடியவர். தனது வேலைகளை தாமாக செய்யும் பொறுப்பை சிராஜும் கற்றுக்கொள்ள வேண்டும்”

raman

“அவரிடம் டுப்லஸ்ஸிஸ் அடிக்கடி அவரின் பொறுப்புகளைப் பற்றி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். பரபரப்பான தருணங்களில் சிராஜ் எளிதாக பதற்றமடைந்து விடுகிறார். அவரை போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக இக்கட்டான தருணங்களில் பதற்றமடைய கூடியர்வர்கள். எனவே அவர் வெற்றிகரமாக செயல்படுவதற்கு யாரேனும் ஒருவர் தொடர்ச்சியாக உத்வேகத்தை கொடுக்க வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு தருணத்தின் இடையில் அவரிடம் டுப்லஸ்ஸிஸ் பேச வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது சிராஜ் போன்ற பவுலர் எதிரணி பேட்ஸ்மேன்கள் அடிக்கும் போது உடனடியாக பதற்றம் அடைந்து விடுவார்கள் என்பதால் அவரிடம் தோனியை போல அடிக்கடி டுப்லஸ்ஸிஸ் சென்று சிறப்பாக பந்துவீச என்ன செய்ய வேண்டும் என்பதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று ராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Joginder 1

2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான அந்த பரபரப்பான கடைசி ஓவரில் முதல் ஒருசில பந்துகளில் சொதப்பிய போதிலும் உடனடியாக ஜோகிந்தர் சர்மாவின் அருகே கேப்டன் தோனி சென்று எவ்வாறு சிறப்பாக பந்துவீச வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்கி வெற்றிகரமான பவுலராக வலம்வர வைத்தார்.

இதையும் படிங்க : தளபதி விஜய் மாதிரி. தல தோனியும் களமிறங்கினால் மைதானத்தில் இந்த விடயம் நடக்கும் – தினேஷ் கார்த்திக்

அந்த வகையில் அவரைப் போன்றே குணத்தை கொண்ட சிராஜிடம் அவர் சொதப்பும் போது கேப்டனாக டு பிளசிஸ் அடிக்கடி பேசி சிறப்பான வழியில் வழிநடத்த வேண்டும் என்று ராமன் கூறியுள்ளார்.

Advertisement