தளபதி விஜய் மாதிரி. தல தோனியும் களமிறங்கினால் மைதானத்தில் இந்த விடயம் நடக்கும் – தினேஷ் கார்த்திக்

Dhoni-vijay-2
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆரம்பத்திலிருந்தே களத்திலும் களத்திற்கு வெளியேவும் பல சொதப்பல்களை செய்து தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக 4 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் எம்எஸ் தோனி முதல் போட்டி துவங்க ஒருசில நாட்கள் முன்பாக கேப்டன் பொறுப்பை அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்து சாதாரண வீரனாக விளையாடினார். உறுதுணையாக தோனி இருந்த போதிலும் முதல் 4 போட்டிகளில் தோல்வி அடைந்த ஜடேஜா முதல் வெற்றியை பதிவு செய்வதற்கு முன்பே ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்த முதல் சென்னை கேப்டன் என்ற பரிதாபத்திற்கு உள்ளானார்.

maxwell

- Advertisement -

அத்துடன் அதுவரை சிறப்பான ஆல்-ரவுண்டராக செயல்பட்டு வந்த அவர் பேட்டிங் பவுலிங் என மொத்தமாக சொதப்பியதால் கேப்டன்ஷிப் பொறுப்பே வேண்டாமென்று மீண்டும் தோனியிடமே ஒப்படைத்துவிட்டார். ஆனால் அதற்குள் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு 90% சென்னைக்கு குறைந்து போனது.

மீண்டும் தல:
இருப்பினும் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தல என்று ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் எம்எஸ் தோனி கேப்டனாக வந்தது சென்னை ரசிகர்கள் உட்பட அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்தது. அந்த நிலைமையில் பெங்களூருவுக்கு எதிராக புனேவில் நடைபெற்ற தனது 10-ஆவது லீக் போட்டியில் சுமாராக செயல்பட்ட அந்த அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்து லீக் சுற்றுடன் வெளியேறுவதை உறுதி செய்துகொண்டது.

cskvsrcb

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு மஹிபால் லோம்ரோர் 42 (27) கேப்டன் டுப்லஸ்ஸிஸ் 38 (22) விராட் கோலி 30 (33) போன்ற வீரர்கள் தேவையான ரன்களை எடுத்த நிலையில் கடைசி நேரத்தில் அந்த அணிக்காக விளையாடும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 26* (17) ரன்கள் விளாசி சூப்பர் பின்சிங் கொடுத்தார். இறுதியில் அவர் எடுத்த அந்த முக்கியமான 26 ரன்கள் தான் பெங்களூருவின் 13 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றிக்கு துருப்புச் சீட்டாக செயல்பட்டது.

- Advertisement -

தல தல தான்:
இது மட்டுமல்லாமல் இந்த வருடம் பெங்களூரு இதுவரை பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் இதேபோல் கடைசி நேரத்தில் களமிறங்கி பட்டையை கிளப்பும் தினேஷ் கார்த்திக் அந்த அணியின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார். அப்படிப்பட்ட அவர் தனது சொந்த ஊரான சென்னையின் கேப்டனாக இருக்கும் தோனியை பற்றியும் அவரின் ரசிகர்களை பற்றியும் அவருக்கு மக்களிடமுள்ள ஆதரவை பற்றியும் வியந்து போய் அந்த போட்டி முடிந்த பின் பேசினார்.

அது பற்றி புனேவில் நடைபெற்ற அந்த போட்டி முடிந்த பின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் தமிழ் சேனலில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் தமிழில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “நிச்சயமாக தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் எதற்கும் 2-வதாக இல்லை. அவர் களத்திற்குள் நடந்து வரும் போதே மைதானமே அதிரும் அளவுக்கு வித்தியாசமான உணர்வை பார்க்க முடியும்”

- Advertisement -

“சொல்லப்போனால் பீஸ்ட் படத்தின் விஜய் மாதிரி. அந்த வகையில் அவருக்கும் சென்னைக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இன்றுகூட புனே மைதானத்தில் நீங்கள் பார்க்கும் போது முழுக்க முழுக்க மஞ்சள் உடை அணிந்திருந்த ரசிகர்களேயே நிறைய பார்க்க முடிந்தது” என்று தோனியின் ரசிகர்களில் ஒருவரை போல மெய்சிலிர்க்க கூறினார்.

தல – தளபதி:
தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் உட்பட நிறைய தமிழக கிரிக்கெட் வீரர்கள் தமிழகத்தின் பிரபல சினிமா நடிகரான விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில் அவரை தளபதி என்று அழைக்கும் அதே தமிழக ரசிகர்கள் தோனியை தல என்று கொண்டாடுகின்றனர்.

- Advertisement -

அப்படி கிரிக்கெட்டின் தல தோனி மற்றும் சினிமாவின் தளபதி விஜய் ஆகிய இருவருமே களமிறங்கினால் அந்த அரங்கம் அதிரும் என்று தினேஷ் கார்த்திக் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க : நான் கருவில் இருந்த போதே என்னை கொல்ல முயன்றவர் என் தந்தை – உருக்கமான கதையை பகிர்ந்த ராவ்மன் பவல்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னையின் ஒரு ஹோட்டலில் விஜய்யின் சமீபத்திய படமான பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போது தோனியும் அதே ஹோட்டலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அதை அறிந்த விஜய் தோனியிடம் நேராகச் சென்று பார்த்துப் பேசிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

Advertisement