நான் கருவில் இருந்த போதே என்னை கொல்ல முயன்றவர் என் தந்தை – உருக்கமான கதையை பகிர்ந்த ராவ்மன் பவல்

Powell-3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான ராவ்மன் பவல் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் அதிரடியை வெளிப்படுத்தும் இவர் உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக் தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகிறார். 28 வயதான பவலுக்கு இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் தான் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. மிக பலம் வாய்ந்த அதிரடி ஆட்டக்காரரான இவரை 2.80 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி அணி ஏலத்தில் எடுத்து இருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று தனது மிகச்சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்டி வருகிறார். சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 35 பந்துகளை சந்தித்த அவர் 6 சிக்ஸர் 3 பவுண்டரி என 67 ரன்கள் குவித்து அசத்தினார். இயற்கையாகவே மிக எளிதாக சிக்ஸர் அடிக்கும் இவரது திறன் நிச்சயம் பவுலர்களை கதிகலங்க வைக்கும் ஒன்றாக உள்ளது.

அந்த அளவிற்கு தனது பிரமாண்டமான அதிரடியின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வரும் அவர் தனது ஆரம்ப காலகட்ட வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து சில உருக்கமான கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எனது தந்தையை நான் நேரில் பார்த்ததே கிடையாது. என் தாய் தான் என்னையும், என் சகோதரரையும் சிறுவயதிலிருந்து ஆதரித்து வளர்த்தார்கள்.

Rovman Powell 3

நான் என் தாயின் கருவில் இருந்தபோதே என்னை கலைக்குமாறு என் தந்தை என் தாயை துன்புறுத்தினார். ஆனால் எனது தாய் அதற்கு மறுப்பு தெரிவித்து அவருடன் சண்டையிட்டு என்னை வளர்த்தார்கள். அதன் காரணமாக எனது தந்தை எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அவர் இத்தனை ஆண்டுகளில் மீண்டும் எங்களிடம் வரவே இல்லை. ஜமைக்காவில் உள்ள பழைய துறைமுகத்துக்கு அருகே உள்ள பாரிஸ்டர் மாவட்டத்தில்தான் நான் வளர்ந்தேன்.

- Advertisement -

அங்குள்ள இரண்டு அறைகள் மட்டுமே கொண்ட சிறிய வீட்டில்தான் வளர்ந்தேன். என்னையும் என் சகோதரியையும் வளர்க்க என் தாய் மிகவும் கஷ்டப்பட்டார். என்னுடைய தாய் எனக்கு செய்த உதவிகளை கூறுவதற்கு வார்த்தை போதாது. நான் எப்போதெல்லாம் மனம் தளர்ந்து இருப்பேனோ அப்போதெல்லாம் எனது தாயை நினைத்து கொள்வேன். அவர்களுக்கும் என் சகோதரிக்காகவும் நான் எதையும் செய்ய நினைக்கிறேன் என்று உருக்கமான கருத்தினை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : அடுத்த முறை அந்த பாலை மட்டும் மிஸ் பண்ணவே மாட்டேன். சிக்ஸ் தான் – ரிஷப் பண்ட் அதிரடி பேட்டி

ஏற்கனவே ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் தனது ஆரம்ப காலகட்ட வாழ்க்கை குறித்து பேசிய பவல் : என் அம்மாவிடம் நாம் நிச்சயம் வறுமையிலிருந்து வெளி வருவோம் என்று கூறி வளர்ந்ததாகவும் எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்றே தீவிரமாக கிரிக்கெட் விளையாடி வருவதாகவும் ராவ்மன் பவல் கூறியிருந்தார்.

Advertisement