அடுத்த முறை அந்த பாலை மட்டும் மிஸ் பண்ணவே மாட்டேன். சிக்ஸ் தான் – ரிஷப் பண்ட் அதிரடி பேட்டி

Pant
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்து அசத்தியது. முதல் ஓவரின் போது ரன் ஏதும் இல்லாத நிலையிலேயே முதல் விக்கெட்டை இழந்த டெல்லி அணியானது அந்த சரிவில் இருந்து எவ்வாறு மீள போகிறது என்று நினைப்பதற்குள் அடுத்ததாக இரண்டாவது விக்கெட்டும் 37 ரன்களுக்கு விழுந்துவிட்டது. இதன் காரணமாக நிச்சயம் போட்டியில் ஒரு மொமண்ட்டம் வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் வார்னருடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் தனது மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

warner

- Advertisement -

அவர்கள் இருவரது அட்டகாசமான ஆட்டத்தின் காரணமாக 9 ஓவர்களில் அணியின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்தது. அப்போது ரிஷப் பண்ட் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் அவரது இந்த அதிரடியான ஆட்டம் அணியின் ஸ்கோரை உயர்த்த உதவியது என்றே கூறலாம். அவர் கொடுத்த மொமன்டத்தை அப்படியே கையில் எடுத்த வார்னர் மற்றும் ராவ்மன் பவல் ஆகியோர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் டெல்லி அணியை 207 ரன்கள் என்ற இமாலய ரன் குவிப்புக்கு அழைத்துச்சென்றனர்.

ஆனாலும் இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் பெரிய ஸ்கோருக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஸ்ரேயாஸ் கோபால் வீசிய ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை விளாசி அவர் அதே ஓவரின் கடைசி பந்து புல் டாஸாக வர அதனை அடிக்க தவறி போல்டாகி ஆட்டமிழந்து வெளியேறினார். பொதுவாக ஃபுல் டாஸ் பந்தில் பேட்ஸ்மேன்கள் பெரிதளவில் ஆட்டம் இழக்க மாட்டார்கள். பெரும்பாலும் ஃபுல் டாஸாக வீசப்படும் பந்துகள் சிக்சருக்கு தான் செல்லும். ஆனால் ரிஷப் பண்ட் அந்த பந்தை சற்று சரியாக அடிக்க தவறியதால் பந்து பேட்டின் உள்பகுதியில் பட்டு போல்டு ஆனது.

pant 1

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ரிஷப் பண்ட் ஃபுல் டாஸ் பந்தில் ஆட்டமிழந்த விதம் குறித்தும் பேசியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டது மகிழ்ச்சி. சன் ரைசர்ஸ் அணி சேசிங் செய்யும்போது இது பெரிய ஸ்கோர் என்பதனால் கடைசிவரை அவர்கள் அடிக்க வேண்டும். இதனால் எப்படியும் அவர்களை எங்களால் வீழ்த்த முடியும் என்று நினைத்து நாங்கள் பொறுமை காத்தோம். அந்த வகையில் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசி அவ்வப்போது விக்கெட்டுகளை எடுக்க இந்த போட்டியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.

- Advertisement -

டேவிட் வார்னர் இந்த ஆட்டத்தில் ஒரு சிறப்பான இன்னிங்சை வெளிப்படுத்தியுள்ளார். டெல்லி அணிக்காக நான் பார்த்த சிறப்பான இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. அதேபோன்று ராவ்மன் பவல் தொடர்ச்சியாக பல போட்டிகளில் ரன்களை எடுக்கவில்லை. ஆனாலும் அவருக்கு ஆதரவளித்தோம் தற்போது சரியான நேரத்தில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார் என்று ரிஷப் பண்ட் கூறினார்.

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு எப்போது? – ஜெயவர்த்தனே கொடுத்த பதில்

மேலும் ஃபுல் டாஸ் பந்தில் தான் அவுட் ஆனது குறித்து பேசிய பண்ட் கூறுகையில் : இந்த போட்டியில் நான் ஃபுல் டாஸ் பந்தில் அவுட்டானேன். இது விளையாட்டில் ஒரு பகுதிதான். ஆனால் அடுத்த முறை இது போன்ற பந்துகளை நிச்சயம் விடமாட்டேன். ஃபுல் டாஸ் பந்து வந்தால் சிக்ஸர் தான் என்று அதிரடியான கருத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement