மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு எப்போது? – ஜெயவர்த்தனே கொடுத்த பதில்

Arjun
- Advertisement -

இந்திய அணியின் ஜாம்பவான் வீரரும், கிரிக்கெட் உலகின் கடவுள் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹரியானா அணிக்கு எதிராக சையது முஷ்டாக் அலி தொடரிலும் மும்பை அணிக்காக அறிமுகமாகி இருந்தார். 22 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர் இடது கை மித வேகப்பந்து வீச்சாளர் என்பதோடு கூடுதலாக பேட்டிங் செய்யும் திறமையும் கொண்டவர். ஒரு ஆல்-ரவுண்டராக பார்க்கப்படும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு உள்ளூர் தொடர்களில் வாய்ப்பு கிடைத்தாலும் ஐபிஎல் தொடரில் அவர் இதுவரை எந்த அணிக்கும் விளையாடியதில்லை.

Arjun

கடந்த சில சீசன்களாகவே அவர் ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தாலும் இதுவரை அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோன்று நடப்பு ஆண்டிற்கான மெகா ஏலத்திலும் அவரை மும்பை அணி வாங்கி இருந்தது. இப்படி தொடர்ச்சியாக மும்பை அணியுடன் இணைந்து பயணித்து வந்தாலும் இதுவரை அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. திறமையான வீரர்களுக்கே அணியில் இடம் என்பதனால் அவர் காத்திருக்க வேண்டிய நிலையே இதுவரை இருந்து வருகிறது.

- Advertisement -

ஆனால் இம்முறை நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் இனிவரும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அதனை அடிப்படையாக வைத்து தரமான அணியை உருவாக்கி அடுத்த ஆண்டில் விளையாட வைக்கப் போவதாகவும் மும்பை அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே தெரிவித்திருந்தார். குறிப்பாக இந்த ஐபிஎல் தொடர் முழுவதுமே மும்பை அணியின் பந்து வீச்சு மிக மோசமாக இருந்து வருகிறது. பும்ராவை தவிர்த்து மற்ற எந்த பந்து வீச்சாளரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவில் பந்து வீசவில்லை.

arjun tendulkar

இந்நிலையில் இனிவரும் சில போட்டிகளில் முன்னணி பந்துவீச்சாளர்களை அணியில் இருந்து நீக்கி இளம் வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்க அந்த அணி நிர்வாகம் முடிவினை எடுத்துள்ளது. அதன் காரணமாக அர்ஜுன் டெண்டுல்கருக்கும் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மும்பை அணியின் பயிற்சியாளரான ஜெயவர்தனே சச்சினின் மகனான அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது குறித்து வெளிப்படையான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : மும்பை அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே திறமையான வீரர்கள் தான். அவர்களின் திறமை அடிப்படையில் தான் அணியில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனாலும் இம்முறை இளம்வீரர்களுக்கு அவர்களது திறனை வெளிப்படுத்த நாங்கள் வாய்ப்பினை வழங்க விரும்புகிறோம். ஆனால் அணியின் காம்பினேஷன் சரியாக இருக்கும் படி தான் அந்த வாய்ப்புகள் கொடுக்கப்படும்.

இதையும் படிங்க : கடைசி ஓவரின் போது டேவிட் வார்னர் சொன்ன அந்த விஷயம். போட்டி முடிந்து நெகிழ்ந்து பேசிய – ரோவ்மன் பவல்

அதன்படி இனிவரும் போட்டிகளிலும் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் அர்ஜுன் டெண்டுல்கரும் அணியில் சேர்க்கப்படும் போது சரியான காம்பினேஷன் இருந்தால் நிச்சயம் அவர் மும்பை அணிக்காக அறிமுகமாகி விளையாடுவார் என்று கூறினார். இதன் காரணமாக அடுத்து வரும் ஐந்து போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement