கடைசி ஓவரின் போது டேவிட் வார்னர் சொன்ன அந்த விஷயம். போட்டி முடிந்து நெகிழ்ந்து பேசிய – ரோவ்மன் பவல்

Powell
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டி நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. முக்கியமான இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை குவித்தது. பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பினையும் உயிர்ப்புடன் வைத்துள்ளது.

powell 1

- Advertisement -

நேற்றைய போட்டியில் டெல்லி அணியில் அதிகம் மாற்றம் இருக்காது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் நான்கு மாற்றங்களை செய்து ரிஷப் பண்ட் சற்று வியப்படைய வைத்தார். இப்படி நான்கு மாற்றங்கள் ஒரே போட்டியில் நிகழ்த்தப்படும் இந்த போட்டியில் டெல்லி அணியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் மற்றும் ராவ்மன் பவல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அவர்களது ஜோடி 4-வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்தது. டெல்லி அணி குவித்த 207 ரன்கள் என்ற மிகப்பெரிய ரன் குவிப்பிற்கு காரணமாக வார்னர் ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 92 ரன்களையும், பவல் 35 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்சர்கள் என 67 ரன்களையும் குவித்து அசத்தினார்கள்.

powell 2

டெல்லி அணி ஒரு கட்டத்தில் 85 ரன்களில் இருந்தபோது 3 விக்கெட்டுகளை இழந்ததால் ரோவ்மன் பவல் முன்கூட்டியே களத்திற்கு வந்தார். இது சரியான முடிவு தானா? என்று அனைவரும் கேள்வி எழுப்பிய வேளையில் 9-வது ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை வார்னர் மற்றும் பவல் ஆகியோர் விக்கெட்டை இழக்காமல் அதிரடியாக விளையாடி டெல்லி அணியை பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோவ்மன் பவல் கடைசி ஓவரின் போது வார்னருக்கு சதமடிக்க வாய்ப்பு இருந்ததால் அவரிடம் சென்று பேசிய ஒரு விடயத்தை தற்போது வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். குறித்து அவர் கூறுகையில் : வார்னர் 92 ரன்களில் இருந்ததால் கடைசி ஓவரின் போது நான் அவரிடம் சென்று முதல் பந்தில் நான் சிங்கிள் எடுக்கிறேன் நீங்கள் சதத்திற்கு செல்லுங்கள் என்று கூறினேன். ஆனால் டேவிட் வார்னர் என்னிடம் : இங்கே பாரு இது கிரிக்கெட்டிற்கு அழகு கிடையாது.

இதையும் படிங்க : அன்றும் இன்றும் என்றும் ! அதான் நம்ம புவி – என பாராட்டுகளை அள்ளும் புவனேஸ்வர் குமார், எதற்கு தெரியுமா?

நாம் தற்போது அதிரடியாக விளையாடி வருகிறோம். உன்னால் முடிந்த அளவு கடைசி ஓவரில் அனைத்து பந்துகளையும் வெளுத்து வாங்கு. என் சதத்திற்காக நீ யோசிக்காதே அணியின் ரன் குவிப்பு தான் முக்கியம் என்று கூறினார். அவரது இந்த வார்த்தைகள் மேலும் என்னை உற்சாகம் அடைய வைத்தது. அதனால் நான் கடைசி ஓவரில் அதிரடியாக அடித்து நொறுக்கினேன் என ரோவ்மன் பவல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement