உன்னுடைய கடைசி மூச்சு வரை, இதனை நீ வைத்திருக்க வேண்டும் – கோலிக்கு சச்சின் கொடுத்த பரிசு

Sachin Virat Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் படைக்காத சாதனைகளே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு எண்ணிலடங்கா பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். இன்றளவும் உலகம் முழுவதும் சச்சினுக்கு என ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. மேலும் 1989ஆம் ஆண்டு முதல் 2013 வரை கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டை ஆட்சி செய்துள்ளார்.

sachin 2

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடி உள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் தனது ஓய்வை அறிவித்த அவர் அந்த நேரத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி அளித்த ஒரு பரிசு குறித்து வெளிப்படையாக தனது கருத்தினை மனம்திறந்து பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் இந்திய அணிக்காக கடைசி முறை பேட்டிங் செய்து விட்டு வெளியேறிய பின்னர் மன வேதனையுடன் ஒரு ஓரத்தில் அமர்ந்து என் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தேன்.

அப்போது விராட் கோலி எனது அருகில் வந்து ஒரு பரிசு ஒன்றை கொடுத்தார். மேலும் மறைந்த அவர் தந்தை கொடுத்த ஒரு புனித கயிறை என்னிடம் கொடுத்து நீங்கள் இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். நான் சிறிது நேரம் அந்த கயிற்றினை என்னிடம் வைத்துக் கொண்டிருந்தாலும் பிறகு அவரிடம் கொடுத்துவிட்டு “விலைமதிப்பில்லாத இந்த புனித கயிறு உன்னிடம்” தான் இருக்கவேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : ஹர்டிக் பண்டியா தலைமையில் புதிய குஜராத் டைட்டன்ஸ் முழு அணி – உத்தேச ப்ளேயிங் 11 இதோ

இதை “உன்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை இதை நீ பத்திரமாக வைத்திருக்க வேண்டும்” என கூறிவிட்டு மீண்டும் அவரிடமே கொடுத்து விட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் இது இந்த நிகழ்வு என்னுடைய நினைவில் எப்போதுமே இருக்கும் ஒன்று என நெகிழ்ச்சியான இந்த சம்பவம் குறித்தும் விராட் கோலி குறித்து சச்சின் நெகிழ்ச்சியான கருத்தை உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement