ஐபிஎல் 2022 : ஹர்டிக் பண்டியா தலைமையில் புதிய குஜராத் டைட்டன்ஸ் முழு அணி – உத்தேச ப்ளேயிங் 11 இதோ

Pandya
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டதால் அதற்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வண்ணம் கடந்த 2018குப்பின் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு முதல் முறையாக மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடை பெற்றது. அதற்கு முன்பாக சென்னை, மும்பை மும்பை உள்ளிட்ட பழைய 8 அணிகள் தாங்கள் விரும்பும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்த ஐபிஎல் நிர்வாகம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 2 அணிகளும் ஏலத்துக்கு முன்பாக அதிகபட்சமாக 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ள முன்னுரிமை அளித்தது.

Gujarat Titans

- Advertisement -

அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் தாங்கள் விரும்பிய இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை முதல் வீரராக தேர்வு செய்து அவரை கேப்டனாக அறிவித்தது. அத்துடன் உலகின் நம்பர் ஒன் டி20 சுழல் பந்து வீச்சாளராக அறியப்படும் ஆப்கானிஸ்தானின் ரசித் கான், இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் வீரர் சுப்மன் கில் ஆகியோரையும் அந்த அணி நிர்வாகம் தேர்வு செய்தது.

குஜராத் டைட்டன்ஸ்:
இதை தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் நியூஸிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் 10 கோடி என்ற பெரிய தொகைக்கு குஜராத் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் இளம் இந்திய ஆல் ரவுண்டர் ராகுல் திவாடியாவை 9 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு அந்த அணி நிர்வாகம் வாங்கியது.

hardik 2

இது மட்டுமல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், இளம் சுழல்பந்து வீச்சாளர் சாய் சுதர்சன் மற்றும் சாய் கிசோர் ஆகியோரையும் அந்த அணி நிர்வாகம் குறைந்த விலைக்கு வளைத்துப் போட்டது. மொத்தத்தில் இந்த ஏலத்தின் இறுதியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் உட்பட 23 வீரர்களை வாங்கியுள்ள அந்த அணி நிர்வாகம் அதற்காக 89.85 கோடிகளை செலவு செய்துள்ளது. அந்த அணியில் தற்போது 15 இந்திய வீரர்களும் 8 வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள். இவர்களுக்கு வாங்க செலவு செய்யப்பட்ட தொகை போக அந்த அணியிடம் 15 லட்சம் மீதமுள்ளது.

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள மொத்த வீரர்களின் முழு விவரம் இதோ:
ஹர்டிக் பாண்டியா (15 கோடி), ரஷீத் கான் (15 கோடி), சுப்மன் கில் (8 கோடி), ஜேசன் ராய் (2 கோடி), அபினவ் சாதாரங்கணி (2.6 கோடி), டேவிட் மில்லர் (3 கோடி), ரிதிமான் சஹா (1.9 கோடி), மாத்தியூ வேட் (2.40 கோடி), முகமத் ஷமி (6.25 கோடி), லாக்கி பெர்குசன் (10 கோடி), நூர் அஹ்மத் (30 லட்சம்), சாய் கிஷோர் (3 கோடி), யாஷ் தயாள் (3.20 கோடி), அல்சாரி ஜோசப் (2.40 கோடி), பிரதீப் சங்வான் (20 லட்சம்), வருண் ஆரோன் (50 லட்சம்) ராகுல் திவாடியா (9 கோடி), டோமினிக் ட்ராக்ஸ் (1.10 கோடி), ஜெயந் யாதவ் (1.70 கோடி), விஜய் சங்கர் (1.40 கோடி), தர்ஷன் நல்கண்டே (20 லட்சம்), குர்கீரத் சிங் மன்(50 லட்சம்), சாய் சுதர்ஷன் (20 லட்சம்)

Hardik

இந்த மெகா ஏலத்தின் முடிவில் மொத்த அணியில் இருந்து களத்தில் விளையாட சரியாக பொருந்த கூடிய திறமையான 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு அணி நிர்வாகத்துக்கு உள்ளது. அந்த வகையில்

ஐபிஎல் 2022 தொடரில் முதல் முறையாக கேப்டன்ஷிப் செய்யப்போகும் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கப் போகும் உத்தேச 11 பேர் கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி இதோ:
சுப்மன் கில், ஜேசன் ராய்*, குர்க்ரீட் சிங், விஜய் சங்கர், ஹர்டிக் பாண்டியா (கேப்டன்), மேத்தியூ வேட்* (கீப்பர்), ராகுல் திவாடியா, சாய் கிசோர், ரஷீத் கான்*, முகமத் ஷமி, லாக்கி பெர்குசன்*.

Advertisement