CSK vs GT : குஜராத் தோல்வி அடைந்தாலும் தமிழக வீரரை மனதார பாராட்டி சச்சின் வெளியிட்ட பதிவு – விவரம் இதோ

Sachin
- Advertisement -

அகமதாபாத் மைதானத்தில் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்று முடிந்த 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சி.எஸ்.கே அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. என்னதான் இந்த போட்டியில் குஜராத் அணி தோல்வி அடைந்திருந்தாலும் அவர்களது போராட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

ஏனெனில் இந்த போட்டியின் கடைசி பந்துவரை போராடிய குஜராத் அணியானது கடைசி பந்தில் வெற்றியை சி.எஸ்.கே அணியிடம் தாரை வார்த்தது. அவர்களது இந்த விடாமுயற்சி மற்றும் போராட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணியானது அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அசத்தியது.

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் 3 ஆவது வீரராக களமிறங்கிய 21 வயதான தமிழக வீரர் சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த இன்னிங்சில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.

ஐ.பி.எல் போன்ற மிகப்பெரிய தொடரில் அதுவும் அழுத்தம் நிறைந்த இறுதிப்போட்டியில் அவரது இந்த அதிரடியான ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அவரது இந்த அசத்தலான ஆட்டத்தை கண்டு வியந்த சச்சின் டெண்டுல்கர் கூட தனது டிவிட்டர் பக்கத்தில் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடிய விடியோவை பதிவிட்டு அவருக்கு மனதார தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அந்தவகையில் சச்சின் வெளியிட்டுள்ள அந்த பதிவில் அவர் குறிப்பிட்டதாவது : இன்றைய இரவில் சாய் சுதர்சன் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் நம் கண்களுக்கு விருந்தளித்துள்ளார் என்று தனது பாராட்டுகளை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : CSK vs GT : நல்லவங்களுக்கு நல்லது தான் நடக்கும். கோப்பையை வென்ற தோனியை வாழ்த்தி – நெகிழவைத்த சிஷ்யன் பாண்டியா

இந்த ஆண்டு குஜராத் அணிக்காக 3 ஆவது வீரராக களமிறங்கி விளையாடிய கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடினாலும் தொடரின் பாதியிலேயே ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து வெளியேறினார். அதன்பின்னர் அவரது இடத்திற்கு மாற்று வீரராக சாய் சுதர்சன் கொண்டு வரப்பட்டார். அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய அவர் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement