CSK vs GT : நல்லவங்களுக்கு நல்லது தான் நடக்கும். கோப்பையை வென்ற தோனியை வாழ்த்தி – நெகிழவைத்த சிஷ்யன் பாண்டியா

Hardik-Pandya
- Advertisement -

அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதியபோட்டியானது பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

CSK vs GT

- Advertisement -

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. குஜராத் அணி சார்பாக சாய் சுதர்ஷன் 96 ரன்களையும், விரிதிமான் சாஹா 54 ரன்களையும் குவித்தனர். அதன்காரணமாக 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு சி.எஸ்.கே அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் சி.எஸ்.கே அணி பேட்டிங் செய்ய வந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்து சி.எஸ்.கே அணிக்கு 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை துரத்திய சென்னை அணியானது துவக்கத்தில் இருந்தே அதிரடி காட்ட இறுதியில் போட்டியின் கடைசி பந்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அந்தவகையில் 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 குவித்து வெற்றிபெற்றது.

CSK 2023

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் அனைத்து விதத்திலும் சிறப்பாகவே விளையாடினோம். இந்த போட்டியில் நாங்கள் இறுதிவரை போராடியது உண்மையிலே பெருமையாக இருக்கிறது. ஒரு அணியாகவே நாங்கள் வெற்றிகளை பெற்றோம், அதேபோன்று ஒரு அணியாகவே நாங்கள் தோல்விகளை சந்தித்தோம்.

- Advertisement -

இந்த தோல்விக்கு நான் எந்தவொரு குற்றத்தையும் கூற விரும்பவில்லை. ஏனெனில் எங்களை விட சி.எஸ்.கே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதேபோன்று எங்கள் அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். சாய் சுதர்சன் மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதேபோன்று பந்துவீச்சில் ரஷீத் கான், நூர் மற்றும் முகமது ஷமி ஆகியோர் மிகச்சிப்பாக பந்துவீசினார்கள்.

இதையும் படிங்க : நீங்க காமிக்குற அன்புக்கும், பாசத்துக்காகவும் தான் இதை பண்றேன் – ஓய்வு குறித்த முடிவை அறிவித்த தோனி

எம்.எஸ்.தோனிக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய ஆட்டத்தில் அவர் வெற்றிபெற வேண்டும் என விதி இருக்கிறது. நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும். எனக்கு தெரிந்து தோனி ஒரு நல்ல மனிதர். கடவுள் என்று அவருக்கு ஆசிர்வாதம் வழங்கியுள்ளார். இன்றைய இரவு அவருக்கானது என பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement