நீங்க காமிக்குற அன்புக்கும், பாசத்துக்காகவும் தான் இதை பண்றேன் – ஓய்வு குறித்த முடிவை அறிவித்த தோனி

MS-Dhoni
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியானது டக் வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

CSK vs GT

- Advertisement -

இந்நிலையில் கோப்பையை வென்ற கையோடு தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்றே பலரும் நினைத்திருப்பார்கள். ஏனெனில் இந்த ஆண்டு தோனியின் ஓய்வு குறித்தே அதிகளவில் பேசப்பட்டு வந்தது. ஆனால் நேற்றைய போட்டி முடிந்து தோனி இன்னும் 1 ஆண்டு ரசிகர்களுக்காக தான் விளையாட இருப்பதாக தோனி உறுதியளித்துள்ளார்.

அந்தவகையில் நேற்றைய வெற்றிக்கு பின்னர் தனது ஓய்வு குறித்து பேசிய தோனி கூறுகையில் : இது என்னுடைய ஓய்வை அறிவிக்க சரியான நேரம். ஆனால் நான் எங்கு சென்றாலும் ரசிகர்கள் காண்பிக்கும் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் இன்னும் ஒரு சீசன் விளையாட முடிவுசெய்துள்ளேன். தற்போது தேங்க் யூ சோ மச் என்று சொல்லி செல்வது எளிதான ஒன்று தான்.

CSK

ஆனால் அடுத்த 9 மாதங்கள் பயிற்சி செய்து மீண்டும் ஒரு சீசன் விளையாடுவது என்பது மிகவும் கஷ்டம். அவை அனைத்தும் எனது உடற்தகுதியிலேயே இருக்கிறது. இருப்பினும் 6-7 மாதங்கள் அவகாசம் இருக்கிறது. எனது அணியினருக்கு நான் அளிக்கும் கிப்ட் நான் மேலும் ஒரு ஆண்டு விளையாடுவது தான். ஆனால் அது எனக்கு எளிதாக இருக்காது.

- Advertisement -

இருந்தாலும் அவர்களும் அந்த அளவிற்கு என்மீது அன்பையும், பாசத்தையும் காண்பிக்கிறார்கள். எனவே அவர்களுக்காகவும் நான் இதை செய்ய நினைக்கிறன். எனவே இன்னும் ஒரு சீசன் நான் விளையாட இருக்கிறேன். இந்த ஆண்டு முழுவதும் ரசிகர்கள் நான் எங்கு சென்றாலும் எனது பெயரை உச்சரித்தனர். இதுபோன்ற நிகழ்வுகளை நான் இன்னும் ரசிக்க ஆசைப்படுகிறேன் என்று தோனி கூறினார்.

இதையும் படிங்க : வீடியோ : மாஸ் ஃபினிஷிங் செய்த ஜடேஜா, குஜராத்தை அதன் கோட்டையில் வீழ்த்தி – சிஎஸ்கே வரலாறு படைத்தது எப்படி?

அவர் அளித்த இந்த தெளிவான அறிக்கை மூலம் தல தோனி இன்னும் ஒரு ஆண்டு விளையாடுவது உறுதியாகியுள்ளது. அதன்படி அடுத்த சீசனில் தோனி சென்னை ரசிர்கள் மத்தியிலேயே ஓய்வை அறிவித்து வெளியேறுவார் என்றும் அதுவும் சீப்பாக மைதானத்தில் தான் நாடக்கும் என்பது உறுதியாகியுள்ளது. தோனி இன்னும் ஒரு சீசன் கட்டாயம் ரசிகர்களுக்காக விளையாடுவேன் என்று கூறியுள்ளது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement