- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அண்டர் 19 உலககோப்பையை வென்ற கேப்டன் ஆயுஷ் மாத்ரேவுக்கு சச்சின் கொடுத்த – விலை மதிப்பில்லாத பரிசு

ஐசிசி-யின் 19 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜிம்பாப்வே நாட்டில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தினர். இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே எந்த ஒரு தோல்வியையும் சந்திக்காத இந்திய அணி இறுதி போட்டியிலும் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றியை பெற்றது.

ஆயுஷ் மாத்ரேவுக்கு சச்சின் டெண்டுல்கர் வழங்கிய பரிசு :

அதன்மூலம் ஆறாவது முறையாக இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியிருந்தது. இப்படி இளம் இந்திய வீரர்கள் பெற்ற இந்த வெற்றிக்கு நாடு முழுவதில் இருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக கேப்டனாக இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்திய ஆயுஷ் மாத்ரேவை பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் அனைவரையும் விட ஒரு படி மேலே சென்று சாம்பியன் பட்டத்தை வென்ற ஆயுஷ் மாத்ரேவை தனது இல்லத்திற்கு அழைத்து அவருக்கு ஒரு மறக்க முடியாத வாழ்நாள் பரிசினை வழங்கி அவரை உற்சாகப்படுத்தியுள்ளார்.

ந்த வகையில் ஆயுஷ் மாத்ரேவை அவரது குடும்பத்தினருடன் தனது இல்லத்திற்கு அழைத்த சச்சின் டெண்டுல்கர் தனது டெஸ்ட் கரியரின் கடைசி போட்டியின் போது பயன்படுத்திய ஜெர்சி ஒன்றை அவருக்கு கையொப்பமிட்டு பரிசளித்தார். அதுமட்டுமின்றி உன்னுடைய இலக்கு இந்திய அணிக்கு விளையாடுவதை நோக்கியே இருக்க வேண்டும் என்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடரிலிருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் விலகல் – மிகப்பெரிய பின்னடைவு

அதனைப் பெற்றுக் கொண்ட ஆயுஷ் மாத்ரேவும் என்னுடைய வாழ்நாளில் இதைவிட மிகப்பெரிய பரிசு இருக்காது என்றும் இதை பொக்கிஷமாக பார்க்கிறேன் என்றும் அவரது நன்றியை தெரிவித்து இருந்தார். அதோடு நான் டிவி-யில் பார்த்து வளர்ந்த ஒரு ஜாம்பவானை இன்று நேரில் அவரது இல்லத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

- Advertisement -