டி20 உலககோப்பை தொடரிலிருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் விலகல் – மிகப்பெரிய பின்னடைவு

Wanindu Hasaranga
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இலங்கை அணி நேற்று தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடி 22 வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை பதிவு செய்திருந்தது.

இலங்கை அணியிலிருந்து நட்சத்திர வீரர் விலகல் :

அதனை தொடர்ந்து தங்களது சொந்த மண்ணில் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட இருக்கும் இலங்கை அணி நிச்சயம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் என்பது உறுதி. இவ்வேளையில் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் நட்சத்திர வீரர் ஒருவர் காயம் காரணமாக வெளியேறியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன.

- Advertisement -

அந்த வகையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். ஆனாலும் இந்த போட்டியின் போது அவர் பந்து வீசுகையில் பெரிய சிரமத்தை சந்தித்தார்.

அதன் பின்னர் போட்டிக்கு பிறகு அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் தொடை நரம்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அவர் எஞ்சியுள்ள இந்த தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காயம் காரணமாக வனிந்து ஹசரங்கா வெளியேறுகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் வனிந்து ஹசரங்கா பின் வரிசையில் பேட்டிங்கிலும் கை கொடுக்கக் கூடியவர்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆடம் கில்கிறிஸ்டின் மாபெரும் சாதனையை தகர்த்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ

அதனால் அவர் அந்த அணியின் மிக முக்கியமான வீரராக பார்க்கப்பட்டார். இவ்வேளையில் அவர் இந்த 2026 டி20 உலககோப்பை தொடரில் வெளியேறியுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் தெரிகிறது. இலங்கை அணி தங்களது அடுத்த போட்டியில் ஓமன் அணிக்கு எதிராக பிப்ரவரி 12-ஆம் தேதி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement