பர்ஸ்ட் செஞ்சுரி அடிச்சிட்டாரு இல்ல. இனிமே தான் சுப்மன் கில்லுக்கு பிரச்சனையே இருக்கு – முன்னாள் வீரர் எச்சரிக்கை

Shubman-Gill
- Advertisement -

இந்திய அணியைச் சேர்ந்த 22 வயதான துவக்க வீரர் சுப்மன் கில் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்து உலக கோப்பையை வென்ற அவர் அதனை தொடர்ந்து வெகு விரைவிலேயே ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி அதிலும் சிறப்பாக செயல்பட்டு 2019-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகினார். இந்திய அணிக்காக இதுவரை 9 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

Shubman Gill

- Advertisement -

சமீபத்தில் அசத்தலாக விளையாடி வரும் அவர் அற்புதமான பேட்டிங் பார்மில் இருக்கிறார். அதிலும் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது 9 போட்டியில் விளையாடியுள்ள அவர் 499 ரன்களை 71.3 சராசரியுடன் 105 என்கிற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து பிரமாதப்படுத்தியுள்ளார். கடைசியாக வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தார்.

அதனைத்தொடர்ந்து அண்மையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தார். அதிலும் குறிப்பாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி 130 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் மிக குறைந்த வயதில் சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் கில் படைத்தார்.

Shubman Gill

இந்நிலையில் சுப்மன் கில்லின் இந்த சிறப்பான ஆட்டத்தை பார்த்த பலரும் அவரை 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரில் தேர்வு செய்ய வேண்டும் என்று தங்களது பாராட்டுகளையும், கருத்துகளையும் கூறி வருகின்றனர். இந்நிலையில் சுப்மன் கில்லுக்கு இனிதான் ஆபத்து காத்திருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம் அவருக்கு பாராட்டுடன் கூடிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : திறமையை வைத்து பார்த்தால் சுப்மன் கில் மிகச்சிறந்த வீரராக தான் இருக்கிறார். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமெனில் இனிதான் அவருக்கு இந்திய அணியில் பலப்பரிட்சை துவங்கப் போகிறது. ஏனெனில் எப்போதுமே ஒரு வீரர் சிறப்பாக விளையாட துவங்கி விட்டால் அவர் மீது எதிர்பார்ப்புகள் அதிகளவில் எழுந்து விடும். அப்படி தற்போது சுப்மன் கில்லின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் அவர் தொடர்ச்சியாக இதேபோன்று சீரான இடைவெளியில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை : இந்தியா பண்ண பெரிய தப்பே அவரை செலக்ட் பண்ணாம விட்டது தான்- முன்னாள் பாக் வீரர் கருத்து

அதுமட்டுமின்றி இனி வரும் போட்டிகளில் எதிரணி பந்துவீச்சாளர்கள் அவரது விக்கெட்டை வீழ்த்த பல்வேறு யோசனைகளையும், யுக்திகளையும் போட்டியின் போது செயல்படுத்துவார்கள் அதனை எல்லாம் சமாளிக்க வேண்டும். இப்படி பெரும் சவாலுக்கு மத்தியில் இனி வரும் போட்டிகளில் அவர் விளையாட உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து தன்னுடைய தரத்தை நிரூபித்த அவருக்கு இனிவரும் தொடர்களில் தான் உண்மையான சவால் காத்திருக்கிறது என சபா கரீம் பாராட்டுடன் கூடிய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement