ஆசிய கோப்பை : இந்தியா பண்ண பெரிய தப்பே அவரை செலக்ட் பண்ணாம விட்டது தான்- முன்னாள் பாக் வீரர் கருத்து

Umran-1
- Advertisement -

ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசியாவின் டாப் 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்றாலும் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வலுவான அணியாக திகழ்வதால் மீண்டும் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsPAK

- Advertisement -

அதேபோல் இலங்கை போன்ற எதிரணிகளை காட்டிலும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடைசியாக இவ்விரு அணிகளும் இதே துபாயில் மோதியபோது உலக கோப்பையில் இந்தியாவை முதல் முறையாக தோற்கடித்த பாகிஸ்தான் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து சரித்திரத்தை மாற்றியது. மேலும் அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஷாஹீன் அப்ரிடி இம்முறை காயத்தால் விலகியதால் இந்தியா தப்பித்து விட்டதாக அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வம்பிழுந்து வருகிறார்கள்.

காணாமல்போன உம்ரான்:
மறுபுறம் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் என 2 முக்கிய பவுலர்களை இந்த தொடரில் காயத்தால் இழந்த போதும் எதுவும் பேசாமல் இருந்து வரும் இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் அந்த 2 முக்கிய பவுலர்களுக்கு பதிலாக அதிரடியான வேகத்தில் பந்து வீசக்கூடிய உம்ரான் மாலிக்கை தேர்வு செய்யாமல் இந்தியா தவறு செய்துவிட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆகிப் ஜாவேத் தெரிவித்துள்ளார்.

Umran Malik

ஐபிஎல் 2022 தொடரில் ஹைதராபாத் அணிக்கான தொடர்ச்சியாக 145 – 150+ கி.மீ வேகத்தில் அதிரடியாக பந்து வீசிய அவரை ஆசிய கோப்பையிலும் டி20 உலகக்கோப்பையிலும் தேர்வு செய்ய வேண்டும் என்று சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற ஜாம்பவான்கள் ஆதரவு கொடுத்தனர். ஆனால் அதற்கு முன்னோட்டமாக கொடுக்கப்பட்ட 3 வாய்ப்பில் விவேகமின்றி வேகத்தை மட்டும் பயன்படுத்தி பந்துவீசிய அவர் ரன்களை வாரி வழங்கினார்.

- Advertisement -

அதனால் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 2 – 3 வருடங்கள் சிறப்பாக செயல்படும் வரை இடமில்லை என்ற வகையில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அதிரடியாக நீக்கப்பட்ட அவர் வந்த வாக்கிலேயே காணாமல் போய்விட்டார். ஆனால் அவருடைய வேகத்துக்கு நிகரானவர் யாருமில்லை என்பதால் அவரை இந்தியா தேர்வு செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கும் ஆகிப் ஜாவேத் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Umran Malik

“டி20, ஒருநாள் அல்லது டெஸ்ட் என எந்த போட்டியாக இருந்தாலும் வேகம் வேகம் தான். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர்கள் போட்டியை வென்று கொடுப்பார்கள். ஆரம்பத்தில் பிஎஸ்எல் தொடரில் நாங்கள் நல்ல தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் தடுமாறினோம். இருப்பினும் கடந்த சீசனில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால் நல்ல முடிவுகளை பெற்றோம். அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் உங்களுக்கு போட்டியை வென்று கொடுப்பார்கள். ஆனால் பவுலர்கள் தான் உங்களுக்கு தொடரை வென்று கொடுப்பார்கள். அதனால் உங்களுக்கு பகுதி நேர பந்துவீச்சாளர்களை விட 4 தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை”

- Advertisement -

“ஏனெனில் இப்போதெல்லாம் எந்த பவுலரும் 150 கி.மீ வேகத்தில் ஓடி வந்து பந்துவீச விரும்புவதில்லை. அந்த வகையில் இந்தியா இந்த ட்ரிக்கை தவற விட்டு விட்டதாக நினைக்கிறேன். உலகக் கோப்பைக்கு முன்பாக இந்த தொடரில் அவருக்கு நிறைய வாய்ப்பளித்து அவரை வளர்த்திருக்க வேண்டும். உம்ரான் முதல் முறையாக பந்து வீசும் போதே நான் மிகவும் ஆச்சரியமாக பார்த்தேன். 155 வேகத்தில் பந்து வீசும் அவர் சரியான இடத்தில் பந்து வீசுகிறார். இதை விட வேறு என்ன வேண்டும்?”

Aakib Javed

“குறிப்பாக நீங்கள் வேகத்துக்கு சற்று அதிகப்படியாக கைகொடுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் போது நிச்சயமாக அவரைப்போன்ற பவுலர்களுக்கு நல்ல உதவி கிடைக்கும். நானாக இருந்திருந்தால் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் அவரையும் சேர்த்து ஒரு தீவிரமான பந்து வீச்சு கூட்டணியை உருவாக்கியிருப்பேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க : எனக்கு 75 வயதாகி விட்டதா? – உள்ளூர் தொடருக்கு கூட தேர்வு செய்யாத விரக்தியில் விளாசிய இந்திய வீரர்

அதாவது வெறும் 3 போட்டிகளில் சுமாராக செயல்பட்டார் என்பதற்காக மேற்கொண்டு வாய்ப்பு கொடுக்காமல் உம்ரான் மாலிக்கை கழற்றிவிட்டு இந்தியா தவறு செய்து விட்டதாக ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார். மேலும் இந்த ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் வாய்ப்பளித்திருந்தால் நிச்சயம் வேகத்துக்கு உதவும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் அவர் இந்தியாவுக்கு வெற்றிகளைப் பெற்று கொடுப்பவராக வளர்ந்திருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement