அந்த பையனை ரொம்ப திட்டாதீங்க. ஆசியக்கோப்பைல பாருங்க அவரோட திறமைய – சபா கரீம் ஆதரவு

Karim
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் கலந்துகொண்டு விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த இந்திய அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Asia-Cup

- Advertisement -

பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இடம் பெறவில்லை என பிசிசிஐ தெளிவாக கூறிவிட்டது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக முக்கிய தொடராக பார்க்கப்படும் இந்த ஆசிய கோப்பை தொடரில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு அனுபவ வீரரான முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது பெரிய அளவில் பேசப்பட்டது.

அதோடு கூடுதலாக சீனியர் வீரரான முகம்மது ஷமியை தாண்டி இளம் வீரரான ஆவேஷ் கானை அணியில் தேர்வு செய்தது தவறு என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதோடு சமீபத்தில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆவேஷ் கான் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்தியதால் அவரை அணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

Avesh-Khan-2

இந்நிலையில் ஆவேஷ் கானுக்கு ஆதரவாக தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி இளம் வீரரான ஆவேஷ் கானின் திறமை மீது நம்பிக்கை வைத்து இடம் கொடுத்துள்ளது. எனவே அவரை உடனடியாக நீக்குவது என்பது சரியான முடிவு கிடையாது. எந்த ஒரு வீரரையும் இந்திய அணி எளிதில் அணியில் இணைத்து விடாது.

- Advertisement -

அந்த வகையில் ஆவேஷ் கான் ஒரு திறமை வாய்ந்த வீரர் தான். அவர் பெரிதாக எந்த தவறையும் இதுவரை செய்யவில்லை. ஷமிக்கு பதிலாக அவர் இந்திய அணியில் இடம் பெற்றது சரியான பலனை தரும். தேர்வாளர்களின் பார்வையில் ஒரு இளம் வீரரின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்து விட்டார்கள். எனவே நிச்சயம் அவர்களின் முடிவை நாம் மதிக்க வேண்டும்.

இதையும் படிங்க : இந்திய அணியை பாத்தாவது கொஞ்சம் திருந்துங்க. பாகிஸ்தான் அணியை விளாசிய – டேனிஷ் கனேரியா

என்னை பொறுத்தவரை ஆவேஷ் கான் தனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை நிச்சயம் ஆசிய கோப்பை தொடரில் அற்புதமாக பயன்படுத்துவார் என அவருக்கு ஆதரவாக சபா கரீம் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement