இந்திய அணியை பாத்தாவது கொஞ்சம் திருந்துங்க. பாகிஸ்தான் அணியை விளாசிய – டேனிஷ் கனேரியா

Kaneria
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையில் தற்போது அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணியானது ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரிலும் வெற்றி பெறும் முனைப்போடு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. அதே வேளையில் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர், நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கும் ஒரு கண் வைத்துள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்பை ஏற்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த இரண்டு கோப்பைகளையும் வெல்லும் அளவிற்கு தீவிர முனைப்பில் உள்ளது.

IND

- Advertisement -

அதன் ஒரு பகுதியாக ஆசிய கோப்பையில் தங்கள் பலத்தை நிரூபிக்க காத்திருக்கும் இந்தியா அணியானது ஆகஸ்ட் 28-ஆம் தேதி தங்களது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை சந்திக்க இருக்கிறது. துபாயில் நடைபெற இருக்கும் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் இந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தங்களது பலத்தை நிரூபிக்க இந்திய அணி தயாராக காத்திருக்கிறது.

அதே வேளையில் இந்திய அணியில் தற்போது பல்வேறு இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அணியை தேர்வு செய்வதிலேயே கடும் போட்டி நிலவியதை நாம் காண முடிந்தது. அதுமட்டும் இன்றி இந்திய சீனியர் வீரர்கள் அணி மட்டுமின்றி இன்னும் இரண்டு அணிகளை கூட பிரிக்கும் அளவிற்கு தற்போது இந்திய அணியின் பென்ச் வலிமை பலமாக காணப்படுகிறது.

IND vs WI 5th T0I

இந்நிலையில் இந்திய அணியின் இந்த பென்ச் வலிமையை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் அணியை விளாசியுள்ள அந்த அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா கூறுகையில் : இந்திய அணி தற்போது எதிர்காலத்தை கணக்கில் வைத்து தொலைநோக்கு பார்வையுடன் வீரர்களை தயார் செய்து வருகிறது. குறிப்பாக ரோகித் சர்மா தலைமையிலான சீனியர் அணியை தவிர்த்து இந்திய அணி பி மற்றும் சி என இரண்டு அணிகளை பிரித்து விளையாடும் அளவிற்கு தற்போது வலிமையாக உள்ளது.

- Advertisement -

அதோடு பெரும்பாலான போட்டிகளில் இளம் வீரர்களைக் கொண்டு அவர்கள் களமிறங்கி வருவதால் எதிர்காலத்தையும் அவர்கள் கணக்கில் கொண்டு விளையாடி வருகின்றனர். ஆனால் இதே நிலைமை பாகிஸ்தான அணியில் இருக்கிறதா? என்று கேட்டால் நான் இல்லை என்றே கூறுவேன்.

இதையும் படிங்க : IND vs ZIM : வரலாற்றில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அறிமுகமாகி நட்சத்திரங்களாக உருவெடுத்த 4 இந்திய வீரர்களின் பட்டியல்

ஏனெனில் பாகிஸ்தான அணி ஒரே ஒரு மனநிலையை மட்டுமே வைத்துக் கொண்டு விளையாடி வருகின்றனர். ஆனால் அந்த மனநிலையை மாற்ற வேண்டும். எதிர்காலத்தை கணக்கில் கொண்டும் அவர்கள் துணிச்சலான சில முடிவுகளை இந்திய அணியை பார்த்தாவது இனியாவது எடுக்க வேண்டும் என டேனிஷ் கனேரியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement