IND vs ZIM : வரலாற்றில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அறிமுகமாகி நட்சத்திரங்களாக உருவெடுத்த 4 இந்திய வீரர்களின் பட்டியல்

Ashwin
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள இந்தியா அடுத்ததாக ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. வரும் அகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் தலைநகர் ஹராரேயில் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்க ஷிகர் தவான் தலைமையிலான 2வது தர இளம் இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் கேஎல் ராகுல் கேப்டனாக மாற்றப்பட்டுள்ளார். சமீப காலங்களில் கத்துக்குட்டி அணியான மாறியுள்ள ஜிம்பாப்வேக்கு எதிராக கடந்த 10 – 15 வருடங்களில் இதேபோல் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்களில் தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா இம்முறையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsZIM

பொதுவாகவே ஜிம்பாப்வே பலவீனமான அணியாக இருப்பதால் அதற்கு எதிராக நடைபெறும் தொடரில் சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதனால் நிறைய அடுத்த தலைமுறை இளம் இந்திய வீரர்கள் அந்த அணிக்கு எதிராக அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். அந்த வாய்ப்பில் சில வீரர்கள் சுமாராக செயல்பட்டு காணாமல் போனாலும் நிறைய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தொடர்ச்சியான இடத்தை பிடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார்கள்.

- Advertisement -

அதிலும் சில இந்திய வீரர்கள் ஜிம்பாப்வேக்கு எதிராக அறிமுகமாகி காலப்போக்கில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உருவாகி நிறைய சாதனைகளையும் படைத்துள்ளார்கள். அந்த வரிசையில் தற்போதுள்ள இந்திய அணியில் ஜிம்பாப்வேக்கு எதிராக அறிமுகமாகி நட்சத்திரங்களாக உருவெடுத்த வீரர்களை பற்றி பார்ப்போம்:

Chahal

4. யுஸ்வேந்திர சஹால்: ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக சுழல் பந்துவீச்சில் அசத்திய இவர் கடந்த 2016 ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் நிகந்த ஒருநாள் மற்றும் டி20 என 2 வகையான கிரிக்கெட் தொடர்களிலும் அறிமுகமானார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத இவர் அப்போது முதல் இப்போது வரை இந்திய வெள்ளைப் பந்து அணியில் அஷ்வின், ஜடேஜா போன்றவர்களையும் பின்னுக்கு தள்ளி முதன்மை சுழல் பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளராக சாதனை படைத்து வரும் அவர் ஒரு போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்து இதுவரை இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 184* விக்கெட்டுகளை எடுத்து துருப்பு சீட்டு வீரராக விளையாடி வருகிறார்.

Rahul-1

3. கேஎல் ராகுல்: கடந்த 2019க்குப்பின் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரையும் மிஞ்சும் வகையில் இந்தியாவின் லேட்டஸ்ட் ரன் மெஷினாக பேட்டிங்கில் மலைபோல ரன்களை குவித்து வரும் இவர் தற்போது நடைபெறும் ஜிம்பாப்வே தொடருக்கு கேப்டனாகும் அளவுக்கு மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளார். இந்த மிகச்சிறந்த வளர்ச்சியின் ஆரம்பம் கடந்த 2010இல் இதே ஜிம்பாப்வே மண்ணில் துவங்கியது.

- Advertisement -

ஆம் அந்த வருடம் இந்தியா பங்கேற்ற ஒருநாள் மற்றும் டி20 என 2 வகையான கிரிக்கெட்டிலும் அந்த அணிக்கு எதிராக அறிமுகமான இவர் இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாகவும் கேப்டனாகவும் போற்றப்படும் அளவுக்கு இதுவரை 5000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக உருவாகியுள்ளார்.

ashwin 1

2. ரவிச்சந்திரன் அஷ்வின்: சர்வதேச கிரிக்கெட்டில் தமிழகம் உருவாக்கிய மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக போற்றப்படும் இவர் கடந்த 2010இல் இதே ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போது முதல் 2017 வரை 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக விளையாடி வரும் இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில்தேவ் போன்ற ஜாம்பவான்களின் சாதனையை உடைத்து உலகின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சாளராக சக்கை போடு போட்டு வருகிறார்.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டிலும் 4 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ள இவர் 35 வயதிலும் 3 வகையான இந்திய அணியிலும் விளையாடும் அளவுக்கு இளம் வீரர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 654* விக்கெட்டுகளை எடுத்துள்ள இவர் தமிழகத்தின் பெருமையாக இந்தியாவுக்கு விளையாடி வருகிறார்.

kohli 1

1. விராட் கோலி: இன்று இந்தியாவின் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் நட்சத்திர வீரராக வலம் வரும் இவர் 2008இல் இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் 2010இல் ஜிம்பாப்வேக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து தான் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்த துவங்கி நிரந்தர இடத்தைப் பிடித்தார்.

இதையும் படிங்க : ரவீந்திர ஜடேஜாவின் இடத்திற்கு இவரால் தான் ஆபத்து ஏற்படும். கொஞ்சம் ஜாக்கிரதை – நிபுணர்கள் எச்சரிக்கை

அதற்கடுத்த 2011 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 3 வகையான அணியிலும் நிரந்தர இடத்தை பிடித்து கடந்த 10 வருடங்களில் 23000+ ரன்களையும் 70 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்து 33 வயதிலேயே ஜாம்பவானாக போற்றப்பட்டு வருகிறார்.

Advertisement