ஆசியக்கோப்பை : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? சபா கரீம் தேர்வு – விவரம் இதோ

RIshabh Pant Dinesh Karthik
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி ஆசிய கோப்பை தொடரானது தொடங்க உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் என ஆறு அணிகள் இந்த தொடரில் மோத இருப்பதால் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதே வேளையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது முழு பலத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணித்து பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் நிச்சயம் இந்த ஆசிய கோப்பை தொடரை நடப்பு சாம்பியனாக தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India Dhawan

- Advertisement -

அந்த வகையில் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டியாக ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக அந்த போட்டியில் யார் விளையாடுவார்கள் என்பதில் பெரிய குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்டை தான் நியமிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வு குழு முன்னாள் உறுப்பினருமான சபா கரீம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப்மென்ட் ஆகிய இருவரில் ஒருவரை தான் அணியில் தேர்வு செய்ய முடியும்.

Rishabh Pant 44

அதில் ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பராக நியமிப்பது நல்லது. ஏனெனில் தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுத்தால் ஹர்திக் பாண்டியா உடன் சேர்ந்து ஐந்து பவுலர்கள் தான் இந்திய அணியால் விளையாட முடியும். ஆனால் அது சரியாக இருக்காது. ஐந்து பவுலர்கள் இந்திய அணியில் இடம் பெற்று ஆறாவது பவுலராக பாண்டியா விளையாடினால்தான் அது கரெக்டாக இருக்கும்.

- Advertisement -

எனவே தினேஷ் கார்த்திக்கை இந்திய அணியில் தான் எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். சமீபகாலமாகவே இந்திய அணியின் ஃபினிஷராக சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் ரோஹித் சர்மா அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக வாய்ப்பளித்து வருகிறார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா – பாபர் அசாம் ஆகியோரில் சிறந்த கேப்டன் யார்? பாக் ஜாம்பவான் அளித்த பதில் இதோ

அதேபோன்று தினேஷ் கார்த்திக்கும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து டி20 தொடர்களிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement