ரோஹித் சர்மா – பாபர் அசாம் ஆகியோரில் சிறந்த கேப்டன் யார்? பாக் ஜாம்பவான் அளித்த பதில் இதோ

Babar Azam Rohit Sharma IND vs PAK
- Advertisement -

ஆசிய கோப்பையில் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று துபாயில் தங்களது முதல் லீக் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவிருப்பது உலகம் முழுவதிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக இதுபோல் ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகிறது. மேலும் கடைசியாக இதே துபாயில் இவ்விரு அணிகள் மோதிய போது விராட் கோலி தலைமையிலான இந்தியாவை முதல் முறையாக உலகக்கோப்பையில் தோற்கடித்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் புதிய வரலாறு படைத்தது. அதனால் தலைகுனிவை சந்தித்த இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா தலைமையில் தக்க பதிலடி கொடுக்க துபாயில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

INDvsPAK

- Advertisement -

முன்னதாக பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறியபின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தமக்கு ஆதரவாக நியமிக்கப்பட்ட பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் இணைந்து போட்டியின் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் பயப்படாமல் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தை அனைத்து வீரர்களிடமும் ஏற்படுத்தியுள்ளார். அவரது அந்த சத்தமில்லாத ஆக்ரோசமான கேப்டன்ஷிப் வாயிலாக கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் தோல்வியை அடையாமல் இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது.

பாபர் – ரோஹித்:
மேலும் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 14 ஆசிய கோப்பைகளில் 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2018இல் நடைபெற்ற 50 ஓவர் ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது. எனவே அவரது தலைமையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்திய அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், புவனேஸ்வர் குமார் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் இந்தியா பலமான அணியாக திகழ்கிறது.

Babar-Azam-and-Virat-Kohli

அதன் காரணமாக பாகிஸ்தான் உட்பட எஞ்சிய அணிகளை தோற்கடித்து 8வது முறையாக இந்தியா கோப்பையை வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர். மறுபுறம் கடந்த முறை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி காயத்தால் விலகியது பின்னடைவாக இருந்தாலும் பாபர் அசாம் தலைமையில் நிச்சயம் இந்தியாவை தோற்கடிப்போம் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் சவால் விடுத்து வருகின்றனர்.

- Advertisement -

சிறந்த கேப்டன்:
ஆனால் கடந்த 2020 டிசம்பரில் முதல் முறையாக கேப்டன்ஷிப் பொறுப்பேற்ற பாபர் அசாம் இதுவரை இந்தியாவுக்கு எதிரான அந்த ஒரு வெற்றியை தவிர்த்து சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிகளை பதிவு செய்யவில்லை. குறிப்பாக பிஎஸ்எல் தொடரில் இதுவரை அவர் எந்த கோப்பையையும் வெல்லவில்லை. மறுபுறம் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா 2018 ஆசிய கோப்பை உட்பட நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அனுபவம் வாய்ந்த கேப்டனாக திகழ்கிறார்.

Rohith

அந்த வகையில் பேட்ஸ்மேன்களாக ரோகித் சர்மா மற்றும் பாபர் அசாம் ஆகியோர் சரி சமமாக இருந்தாலும் கேப்டன்ஷிப் என வரும்போது ரோகித் சர்மா சற்று சிறந்தவராக உள்ளார் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் முன்னாள் வீரர் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தங்களுடைய அணிக்கு பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற அவசியத்தில் ரோகித் சர்மா மற்றும் பாபர் அசாம் ஆகியோர் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று நமக்கு தெரியும். முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் வெற்றிகளைப் பெறுவதற்கு அவர்கள் சிறப்பாக செயல்படுவது முக்கியமானதாகும்” “ஆனால் கேப்டன்ஷிப் என்று வரும் போது பாபரை விட ரோகித் சர்மா சற்று சிறந்தவராக திகழ்கிறார்.

Younis

ஏனெனில் அவர் இந்திய அணியில் நீண்டகாலம் விளையாடி வரும் சீனியர் வீரராக இருக்கிறார். அத்துடன் தோனி போன்ற மிகச் சிறந்த கேப்டன்களுக்கு கீழ் விளையாடி அனுபவத்தையும் கொண்டிருக்கிறார். எனவே அந்த அனுபவம் ரோகித் சர்மாவுக்கும் இந்தியாவுக்கும் இந்த தொடரில் மிகப்பெரிய சாதகமாக அமையும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க. இந்திய அணிக்கு – ஸ்டைரிஸ் எச்சரிக்கை

அதேபோல் பாபர் அசாம் இதுவரை ஜிம்பாப்வே, இலங்கை போன்ற அணிகளுக்கு எதிராக மட்டுமே மிகச் சிறப்பாக செயல்பட்டு கேப்டனாக வெற்றிகளை பதிவு செய்துள்ளார். ஆனால் இங்கிலாந்து போன்ற பலமான அணிகளுக்கு எதிராக வெற்றிகளை பதிவு செய்துள்ள ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சராசரியில் வெற்றிகளை குவித்த கேப்டனாக சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement