ஒருநாள் போட்டிகளுக்கு இனியும் அவர் செட்டாவார்ன்னு எனக்கு நம்பிக்கை இல்ல – சபா கரீம் வெளிப்படை

Karim
- Advertisement -

இந்திய அணி தொடர்ச்சியாக ஐசிசி நடத்தி வரும் உலக கோப்பைகளை தவற விட்டு வருவதன் காரணமாக தற்போது அணியின் மீதும், அணித்தேர்வின் மீதும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் தற்போது அணியில் தீவிர மாற்றங்கள் செய்யப்பட்டு ஒவ்வொரு வீரர்களின் தனிப்பட்ட ஆட்டமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

IND vs BAN

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இருந்தே வீரர்களின் செயல்பாடு கவனிக்கப்பட்ட வேளையில் இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்தது அனைவரையும் பெரிய வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்குள் அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஒரு நிலையான அணியை தயார் செய்து அந்த அணியே இந்த ஒருநாள் உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஃபார்ம் அவுட்டாக இருக்கும் வீரர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என்கிற வேளையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துவக்க ஆட்டக்காரரான ஷிகார் தவான் அணியிலிருந்து வெளியேற்றப்பட அதிகமான வாய்ப்பு இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

Dhawan

இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான சபா கரீம் 37 வயதான தவானுக்கு இனியும் ஒருநாள் அணியில் இடம் கிடைப்பது சந்தேகம்தான் என்று கூறியுள்ளார். இந்திய அணிக்காக கடைசியாக தவான் விளையாடிய 11 ஒருநாள் போட்டிகளில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளையில் துவக்க வீரருக்கான இடத்தில் மாற்றுவீரர்களாக விளையாடி வரும் இஷான் கிஷன் போன்றோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இதன்காரணமாக சீனியர் வீரரான தவானுக்கு பதிலாக அவர்களை போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஷிகார் தவானின் இடம் குறித்து பேசியுள்ள சபா கரீம் கூறுகையில் : இந்திய அணியின் நிர்வாகம்தான் அவரது இடத்தை முடிவு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : என்னுடைய அதிவேக பந்துவீச்சு சாதனையை அவரால் கண்டிப்பாக முறியடிக்க முடியும் – சோயிப் அக்தர் கணிப்பு

ஏனெனில் இந்திய அணி 275 ரன்கள் முதல் 300 ரன்கள் வரை மட்டுமே அடிக்கவேண்டும் என்று நினைத்து விளையாடினால் மட்டுமே தவானை அணியில் சேர்க்க முடியும். ஏனெனில் அவர் அது போன்ற பிளேயர் தான். ஆனால் 325 முதல் 350 ரன்கள் வரை ஒவ்வொரு போட்டிகளும் குவிக்க வேண்டும் என்று நினைத்தால் தவானுக்கு அணியில் இடம் கிடைக்காது என்று வெளிப்படையாக தனது கருத்தினை சபா கரீம் தெரிவித்துள்ளார்.

Advertisement