என்னுடைய அதிவேக பந்துவீச்சு சாதனையை அவரால் கண்டிப்பாக முறியடிக்க முடியும் – சோயிப் அக்தர் கணிப்பு

akhtar
- Advertisement -

உலகின் அதிவேக பந்துவீச்சாளர் என்ற பெருமையை தற்போது வரை பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் தான் வைத்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக 100 மைல் வேகத்தில் பந்துவீசிய ஒரே வீரர் இவர்தான். அதேபோன்று இன்றளவும் உலகின் அதிவேக பந்தினை வீசிய சாதனைக்கு சொந்தக்காரர் என்கிற பெருமையும் அவரிடம் தான் உள்ளது.

Akhtar

- Advertisement -

ஆனால் இன்றைய நாள் வரை அவரது இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க நாட்டில் கடந்த 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மனுக்கு எதிராக அவர் வீசிய பந்து மணிக்கு 161.4 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்டது.

இதுவே கிரிக்கெட் வரலாற்றில் மிக வேகமாக வீசப்பட்ட பந்து என்று பதிவாகியுள்ளது. ஆனாலும் அவரது இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. அதே வேளையில் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த முன்னாள் வீரர்களான ஷான் டைட் மற்றும் பிரெட் லீ ஆகியோர் மணிக்கு 100 மைல் வேகத்தில் பந்து வீசி இருந்தாலும் அவரது சாதனையை கடக்க முடியவில்லை.

Mark-Wood

இந்நிலையில் இப்படி தனது அதிவேக பந்துவீச்சு சாதனையை முறியடிக்கப்போகும் வீரர் யார்? என்பது குறித்த கணிப்பினை தற்போது சோயிப் அக்தர் வெளியிட்டுள்ளார். இது குறித்த அவர் கூறுகையில் : தற்போதைய கிரிக்கெட் வீரர்களில் மார்க் உட்டால் என்னைவிட அதிவேகமாக பந்துவீச முடியும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் அவர் பந்து வீசும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் நேர்த்தியாக பந்துவீசும் அவர் தொடர்ச்சியாக மணிக்கு 150 கிலோமீட்டர் முதல் 155 கிலோ மீட்டர் வரை அவர் தொடர்ச்சியாக வந்து வீசுகிறார். இன்னும் அவர் தீவிர முயற்சி எடுத்தால் நிச்சயம் என்னுடைய இந்த சாதனையை முறியடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கழற்றி விடப்பட்ட 3 சீனியர்கள், சூரியகுமார் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு சம்பளத்தில் ப்ரமோஷன் – வெளியான புதிய தகவல்

இங்கிலாந்து அணியை சேர்ந்த 32 வயதான முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மார்க் உட் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள், 57 ஒருநாள் போட்டிகள் மற்றும் 27 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement