கழற்றி விடப்பட்ட 3 சீனியர்கள், சூரியகுமார் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு சம்பளத்தில் ப்ரமோஷன் – வெளியான புதிய தகவல்

INDia
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக ஜொலிக்கும் இந்தியா சமீப காலங்களில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவது நிறைய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 3 விதமான ஐசிசி உலக கோப்பைகளிலும் நாக் அவுட் போன்ற அழுத்தம் வாய்ந்த முக்கிய போட்டிகளில் சில முக்கிய வீரர்கள் சொதப்பலாக செயல்படுவது தோல்விகளை பரிசளித்தது. அதனால் காலம் கடந்த வீரர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவுக்கு பதில் ஹர்டிக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் வேலையையும் பிசிசிஐ துவங்கியுள்ளது.

INDia Hardik pandya

- Advertisement -

மேலும் சுமாராக செயல்படும் ஷிகர் தவான் போன்ற வீரர்களுக்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு வகையான போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான வருடாந்திர புதிய சம்பள பட்டியலை நிர்ணயிக்கும் வேலைகளை பிசிசிஐ துவங்கியுள்ளது. இது பற்றி வரும் டிசம்பர் 21ம் தேதியன்று நடைபெறும் பிசிசிஐ உயர்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கழற்றி விடப்படும் சீனியர்கள்:

பொதுவாக இந்தியாவுக்காக அந்த சமயத்தில் எந்தெந்த வீரர்கள் எவ்வளவு விளையாடுகிறார்கள் எந்த அளவுக்கு செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களை வருடாந்திர சம்பள மத்திய ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ சேர்ப்பது வழக்கமாகும். அந்த வகையில் சி, பி, ஏ மற்றும் ஏ ப்ளஸ் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் இந்தியாவுக்கு விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற முதன்மையான வீரர்களுக்கு ஏ ப்ளஸ் பிரிவில் உச்சகட்ட சம்பளமாக 7 கோடி கொடுக்கப்பட்டு வருகிறது.

Rahane

அதற்கு அடுத்தபடியாக உள்ள ஏ பிரிவில் விளையாடும் வீரர்களுக்கு 5 கோடி கொடுக்கப்படுகிறது. மேலும் ஒருநாள் மற்றும் டி20 என 2 வகையான கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும் வீரர்கள் பி பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டு 3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் புஜாரா போல் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும் வீரர்களுக்கு சி பிரிவில் 2 கோடி கொடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடினாலும் வயது காரணமாக சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அஜிங்கிய ரகானே, இஷாந்த் சர்மா, ரித்திமான் சஹா ஆகிய மூவரையும் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் பிசிசிஐ கழற்றி விட்டது. அதனால் இந்திய அணிக்கு இனிமேல் விளையாட மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படும் அவர்களை மதியம் ஒப்பந்தத்திலிருந்து எந்த பிரிவிலும் இல்லாமல் மொத்தமாக விடுவிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

Suryakumar Yadav.jpeg

மறுபுறம் டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே தற்காலிக புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா வருங்காலத்தில் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஏற்கனவே இருந்த சி பிரிவிலிருந்து பி பிரிவுக்கு மாற்றப்பட உள்ளார். முன்னதாக அந்த பிரிவில் ஏற்கனவே இருந்த அவர் கடந்த டி20 உலக கோப்பையில் காயத்துடன் சுமாராக செயல்பட்டதால் இந்த வருடம் சி பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார். அதே போல் சமீப காலங்களில் அட்டகாசமாக செயல்பட்டு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நிரந்தர இடத்தை பிடித்துள்ள சூரியகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகியோர் சி பிரிவிலிருந்து பி பிரிவுக்கு மாற்றப்பட உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:என்னதான் கஷ்டப்பட்டு அணியில் இடம்பித்தாலும் அந்த தம்பி விளையாட வாய்ப்பே இல்ல – அவரு ரொம்ப பாவம்

மேலும் சமீபத்தில் இரட்டை சதமடித்து வருங்காலத்தில் ஓரளவு நிலையாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் இஷான் கிஷான் முதல் முறையாக இந்த மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட உள்ளார். அவரைப் போன்ற மேலும் சில இளம் வீரர்கள் முதல் முறையாக மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஷிகர் தவான் போன்ற மூத்த வீரர்கள் கழற்றி விடப்படுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

Advertisement