2023 உலகக்கோப்பையில் இவர்தான் இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார் – சபா கரீம் கருத்து

Karim
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது நேற்று ஹராரே நகரில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த 190 ரன்கள் என்ற இலக்கினை இந்திய அணி 30.5 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் வெற்றிகரமாக சேசிங் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Shubman Gill

- Advertisement -

இந்நிலையில் இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் துவக்க வீரராக தவானுடன் களமிறங்கிய இளம்வீரர் சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 82 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் சுப்மன் கில்லின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் சுப்மன் கில் மிக முக்கியமான வீரராக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் சுப்மன் கில்லை பேக்கப் ஓபனராக இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும்.

Shubman Gill

ஏனெனில் அவர் ஒரு முப்பரிமான வீரர். 3 விதமான கிரிக்கெட்டிலும் அவர் மிகச் சிறப்பாக விளையாடுகிறார் என்று தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ராகுல் இந்திய அணிக்கு முதன்மை வீரராக மாறி இருந்தாலும் அவரை நான்காவது இடத்தில் விளையாட வைத்துவிட்டு துவக்க வீரருக்கான இடத்தில் சுப்பன் கில்லை தொடர்ந்து விளையாட வைக்கலாம்.

- Advertisement -

இருப்பினும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தவான் மற்றும் ரோஹித் ஆகியோரே முன்னணி துவக்க வீரர்களாக இடம் பெறுவார்கள். அதேவேளையில் சுப்மன் கில்லை ஒரு சிறந்த பேக்கப் ஓப்பனராக அணியில் வைத்திருக்க முடியும். ஒருவேளை அவருக்கு அந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்குமானால் நிச்சயம் அவர் முக்கியமான வீரராகவும் மாற வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : அவுட்டாக்க வேண்டாம், ஆளை காலி செய்தால் போதும் – 1999இல் கங்குலியை சாய்க்க பாக் போட்ட திட்டம்

மூன்று விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடுவது என்பது கடினமான ஒன்று. ஆனால் அதனை கில் சிறப்பாக செய்து காட்டுகிறார். என்னை பொறுத்தவரை அவர் ஒரு நேச்சுரல் பிளேயர். இயற்கையாகவே அவரிடம் நல்ல பேட்டிங் திறமை இருக்கிறது என்று சபா கரீம் தெரிவித்தார்.

Advertisement